Breaking News

திருச்சியில் பொதுசிவில் சட்டத்தை அமுல்படுத்த துடிக்கும் பா.ஜ.க அரசை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் (PFI) & நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) இணைந்து நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

பொதுசிவில் சட்டத்தை அமுல்படுத்த துடிக்கும் பா.ஜ.க அரசை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் (PFI) & நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) இணைந்து மாபெரும் ஷரிஅத் பாதுகாப்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (05.11.16) மாலை 4.45 மணியளவில் திருச்சி மேலசிந்தாமணி, அண்ணாசிலை அருகில் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மாவட்ட தலைவர் முஹம்மது சித்திக் தலைமை தாங்கினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் A.S இஸ்மாயில், SDPI கட்சியின் மாவட்ட தலைவர் I.சபியுல்லாஹ், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) மாநில செயற்குழு உறுப்பினர் M.தஸ்லிமா B.SC., ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

இதில் நூற்றுக்கனக்கான பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

 

Trichy (4) Trichy (3) Trichy (2) Trichy (1)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *