Breaking News

மேலப்பாளையத்தில் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!

பொது சிவில் சட்டத்தை நடைமுறைபடுத்த துடிக்கும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து நெல்லை மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மாபெரும் கன்டண ஆர்பாட்டம் மேலப்பாளையம் சந்தையில் 05-11-2016 அன்று நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இத்ரிஸ் பாதுஷா தலைமை தாங்கினார். அம்பை வட்டார தலைவர் முகம்மது அலி, நாங்குநேரி வட்டார தலைவர் அமின், SDPI கட்சியின் மாவட்ட தலைவர் சாகுல் ஹமிது உஸ்மானி, மாவட்ட பொது செயலாளர் இல்யாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நேஷனல் விமண்ஸ் ஃப்ரண்ட் (NWF) தேசிய துணை தலைவர் பாத்திமா ஆலிமா, SDPI கட்சியின் மாநில துணை தலைவர் நெல்லை முபாரக், பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் அகமது நவவி ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

இதில் கண்டன உரையாற்றிய பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் அகமது நவவி பொது சிவில் சட்டம் என்பது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், அரசியல் சாசனம் சிறுபான்மை சமூகத்திற்கு வழங்கிய தனியார் சட்டங்களையும், மத சுதந்திரத்தையும் பறிக்கக்கூடியது என்பதை தனது உரையில் சுட்டிகாட்டினார்.

பொது சிவில் சட்டத்திற்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய அளவில் செய்துவரும் பிரச்சாரங்கள் பற்றியும் கூறினார். இறுதியாக மேலப்பாளையம் நகர தலைவர் இஷாக் நன்றியுறையாற்றினார்.

இந்த ஆர்பாட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான பெண்கள் உட்பட 700க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

 

melapalayam (2)melapalayam (1) melapalayam (5) melapalayam (6)melapalayam (3) melapalayam (4)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *