Breaking News

பெரம்பலூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற மாபெரும் ஷரிஅத் பாதுகாப்பு ஆர்ப்பாட்டம்!

பெரம்பலூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பொது சிவில் சட்டத்திற்கு எதிராக பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 05-11-2016 அன்று நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் V.முஜிபுர் ரஹ்மான் அவர்கள் தலைமை தாங்கினார்.

SDPI கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் R.ஹஸ்ஸான் MBA அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

SDPI கட்சியின் மாவட்ட தலைவர் A.முஹம்மது ரபீக் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் வழக்கறிஞ்சர் அணி மாநில இணை செயலாளர் தோழர் சீனிவாசராவ், இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் ராஜ கோபால் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

இந்த ஆர்பாட்டத்திற்க்கு பெருந்திரளாக ஜமாஅத்தார்கள், இளைஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

Perambalur (3) Perambalur (2) Perambalur (1)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *