Breaking News

தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற மாபெரும் ஷரிஅத் பாதுகாப்பு ஆர்ப்பாட்டம்!

மத்திய பாஜக அரசே.! ஷரியத் சட்டத்தில் கை வைக்காதே.!! என்ற முழக்கத்தோடு அரசியல் அமைப்பு சட்டம் வழங்கிய மதச் சுதந்திரத்தை பறித்து பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த துடிக்கும் பாஜக அரசை கண்டித்து ஆடுதுறை தரங்கை சாலையில் நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் ஷரிஅத் பாதுகாப்பு ஆர்ப்பாட்டம் 05-11-2016 அன்று மாலை 04:30 மணியளவில் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்பாட்டத்திற்க்கு பாப்புலர் ஃப்ரண்டின் தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜாசர் அஹமது அவர்கள் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை மாவட்ட தலைவர் முஹம்மது பைசல் அவர்கள் முன்னிலை வகித்தார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் ஹாலித் முஹம்மது மற்றும் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தஞ்சை மாவட்ட பொருளாளர் இலியாஸ் மிஸ்பாஹி ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது ஹாலித் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

ஆர்பாட்டத்தின் போது மிக வீரியத்தோடு கண்டன கோஷங்களை SDTU தொழிற்சங்க தஞ்சை மாவட்ட தலைவர் ஜவஹர் அலி அவர்கள் எழுப்பினார்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய பா.ஜ.க அரசின் 16 கேள்விகள் அடங்கிய கேள்வித்தாள் நகல் எரிக்கப்பட்டது. இந்த ஆர்பாட்டத்திற்க்கு பெருந்திரளாக ஜமாஅத்தார்கள், இளைஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

Tanjai Aaduthurai (4) Tanjai Aaduthurai (3) Tanjai Aaduthurai (2) Tanjai Aaduthurai (1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *