Breaking News

தேனியில் நடைபெற்ற பொது சிவில் சட்டம் மதச் சுதந்திரத்திற்கு எதிரானது கலந்தாய்வு கூட்டம்!

பொது சிவில் சட்டம் மதச் சுதந்திரத்திற்கு எதிரானது என்ற தலைப்பில் தேனியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்  இந்தியாவின் சார்பாக கலந்தாய்வு கூட்டம் 24-10-2016 அன்று நடைபெற்றது. 

இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்  இந்தியாவின் மாநில தலைவர் M.முஹம்மது இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் M.முஹம்மது சேக் அன்சாரி மற்றும் SDPI கட்சியின் மாநில தலைவர் K.K.S.M தெஹ்லான் பாகவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு பேராசிரியர் முனைவர் நிலாமுதீன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

இதனை தொடர்ந்து புத்தக வெளியீடு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாராயண் ராய் எழுதிய 'நகரத்தில் ஊரடங்கு உத்தரவு' என்ற புத்தகத்தை பேராசிரியர் முனைவர் நிலாமுதீன் அவர்கள் வெளியிட SDPI கட்சியின் மாநில தலைவர் K.K.S.M தெஹ்லான் பாகவி பெற்றுக்கொண்டார். 

இந்நிகழ்ச்சியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்  இந்தியாவின் மாநில செயலாளர் A. முஹைதீன் அப்துல் காதர் அவர்கள் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

afebcd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *