Breaking News

காஞ்சிபுரம் மாவட்டம் நேதாஜி நகரில் நடைபெற்ற சர்வ சிக் ஷா கிராம் (முழுமையான கல்வி கிராமம்) துவக்க விழா நிகழ்ச்சி!

காஞ்சிபுரம் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக சர்வ சிக்ஷா கிராம் (முழுமையான கல்வி கிராமங்களை உருவாக்குதல்) திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டம் செம்மஞ்சேரி நேதாஜி நகரில் துவக்க விழா நிகழ்ச்சி  21-10-2016 அன்று நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் A.முஹம்மது ஃபயாஸ் அவர்கள் சர்வ சிக்ஷா கிராம் (முழுமையான கல்வி கிராமங்களை உருவாக்குதல்) திட்டத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில் கூறியதாவது: 

1) அனைவருக்கும் அடிப்படை கல்வியை வழங்குவது 

 

2) இலவச டியூசன் வகுப்புகள் நடத்துவது 

 

3) மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்வி விழிப்புணர்வு முகாம்கள் நடத்துவது 

 

4) RTE 2009 சட்ட வழிகாட்டுதல் 

 

5) இடைநிறுத்தம் செய்யப்பட்ட மாணவ, மாணவிகளை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்த்தல் 

 

6) மருத்துவ முகாம்கள் நடத்துதல்

 

7) சிறுபான்மையினருக்கான அரசு கல்வி உதவித் தொகை பெற வழிகாட்டுதல் போன்ற பணிகள் இத்திட்டத்தின் கீழ் நடைபெறும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஜமாஅத் தலைவர் மற்றும் திரளான மாணவர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். 

 

IMG-20161021-WA0048-120161021_171243

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *