Breaking News

“வெறுப்பு அரசியலை நிறுத்து” – காரைக்காலில் நடைபெற்ற மாபெரும் கருத்தரங்கம்!

மத்திய பாஜக அரசே! வெறுப்பு அரசியலை நிறுத்து (Stop Politics Of Hate) என்ற தேசம் தழுவிய பிரச்சாரம் 2016 செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 3 வரை பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக 01.10.2016 அன்று மாலை 06.45 மணிக்கு புதுச்சேரி மாநிலம் காரைக்கால் சாவித்திரி திருமண மஹாலில் மத்திய பா.ஜ.க அரசே வெறுப்பு அரசியலை நிறுத்து "STOP POLITICS OF HATE" என்ற மாபெரும் கருத்தரங்கம் நடைபெற்றது.


இந்த கருத்தரங்கத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் காரைக்கால் மாவட்ட தலைவர் முஹம்மது ஹசன் குத்தூஸ் அவர்கள் தலைமை தாங்கினார். SDPI கட்சியின் காரைக்கால் மாவட்ட தலைவர் முஹம்மது பிலால், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் காரைக்கால் நகர செயலாளர் மஸ்தான் மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது ஜர்ஜிஸ், SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருகினைப்பாளர் பேராசிரியர் த. ஜெயராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான்அவர்கள் நன்றியுரையுடன் இக்கருத்தரங்கு இனிதே நிறைவுற்றது. இக்கருத்தரங்கில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

 

14523177_1170877482990915_1757995863700040480_n14479774_1170877269657603_3080518058979038977_n14448959_1170877016324295_2182884866832601839_n 14463130_1170876999657630_8136235951449170596_n 14484914_1170877526324244_5614200388856634853_n14572953_1170877372990926_6682038642332364809_n14440853_1170876562991007_8683051740913068554_n 14469581_1170876652990998_3272650506204793054_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *