Breaking News

“வெறுப்பு அரசியலை நிறுத்து” – திருச்சியில் தடையை மீறி எழுச்சியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!

மத்திய பாஜக அரசே! வெறுப்பு அரசியலை நிறுத்து (Stop Politics Of Hate) என்ற தேசம் தழுவிய பிரச்சாரம் 2016 செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 03 வரை பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக 02.10.2016 அன்று திருச்சியில் மத்திய பாஜக அரசின் வெறுப்பு அரசியலுக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் காவல்துறையினரிடம் முறையாக அணுகி ஆர்பாட்டத்திற்கு அனுமதி கோரப்பட்டது.
 
காவல்துறையோ ஜனநாயக ரீதியான இந்த ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தது. எனவே திருச்சியில் தடையை மீறி எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் அமீர் பாஷா, மாவட்ட தலைவர் முஹம்மது சித்திக், மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், SDPI கட்சியின் நிர்வாகிகள், ஆண்கள், பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைதாகி பின்பு விடுதலை செய்யப்பட்டனர்.

 

14495452_1171934332885230_2752820749589379034_n14572196_1171934532885210_5799232027247934479_n14462903_1171934362885227_1548296432829245408_n14479545_1171934456218551_7881517047624399460_n14470588_1171935679551762_4330833894179947089_n14563301_1171934322885231_3023356848501774490_n

பத்திரிகையில் வெளிவந்த செய்தி 

 

14479807_612779168893459_1190262227830606824_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *