Breaking News

மத்திய பா.ஜ.க அரசே “வெறுப்பு அரசியலை நிறுத்து” – தாம்பரத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம்!

மத்திய பாஜக அரசே! வெறுப்பு அரசியலை நிறுத்து (Stop Politics Of Hate) என்ற தேசம் தழுவிய பிரச்சாரம் 2016 செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 3 வரை பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சென்னை மண்டலம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இன்று (02.10.2016) மாலை 05.00 மணிக்கு  தாம்பரம் சண்முகம் சாலையில் மத்திய பா.ஜ.க அரசே வெறுப்பு அரசியலை நிறுத்து "STOP POLITICS OF HATE" என்ற மாபெரும் பொதுக்கூட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் M. முஹம்மது சேக் அன்சாரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் நாகூர் மீரான் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் M. முஹம்மது அலி ஜின்னா,  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் M. முஹம்மது இஸ்மாயில், SDPI கட்சியின் மாநில துணைத்தலைவர் நெல்லை முபாரக், மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக  கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

இப்பொதுக்கூட்டத்தில்  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தென் சென்னை மாவட்ட தலைவர் அப்துல் அஜீஸ், வடசென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ரஃபிக் ராஜா, திருவள்ளூர் மாவட்ட தலைவர் நவ்ஃபல் ஆகியோர் தீர்மானங்களை வாசித்தனர். 

பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தீர்மானம் 1 : 

மத்திய பா.ஜ.க அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணர்வும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம் மற்றும் தலித் சமூகத்தினர் தாக்கப்படுவதும் தொடர் கதையாகி வருவதை வன்மையாக கண்டிப்பதோடு இது போன்ற நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்று பொதுக்கூட்டத்தின் வாயிலாக பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2 :

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் படுகொலையை தொடர்ந்து இன்று வரையிலும் சிறுபான்மையினரின் கடைகள், வழிபாட்டு தளங்கள்  மற்றும் பொது சொத்துக்களை இந்துத்துவ வன்முறையாளர்கள் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். வன்முறையை தூண்டும் விதமாக பேசிய இந்து முன்னணி தலைவர் காடேஷ்வரனை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறையில் பாதிக்கப்பட்ட அனைத்து வியாபாரிகளுக்கும் உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 3 : 

சென்னையில் அப்பாவி முஸ்லிம் இளைஞர் மீது வீண்பழி சுமத்தி கொலைவெறி தாக்குதல் நடத்தியதோடு தடுக்க சென்ற காவல்துறை அதிகாரியையும் தாக்கிய பா.ஜ.க, இந்து முன்னணி குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வெறுப்பை உமிழும் பா.ஜ.க வின் தேசிய செயலாளர் H. ராஜா வை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று காவல்துறை மற்றும் மாநில அரசை பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4 :

காவிரி நதி நீர் வழங்குவதில் தமிழகத்திற்கான உரிய பங்கீட்டை மத்திய அரசு கர்நாடக அரசிடம் பெற்று தர வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பை உடனே தாமதமின்றி அமுல்படுத்த  வேண்டும் என்றும் கர்நாடக அரசையும் மத்திய அரசையும் பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 5 :

எதிர்வரும் மழை காலத்தில் எதிர்கொள்ள கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென்று தமிழக அரசை  பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.


இக்கூட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அஹமது முஹைதீன்  அவர்களின் நன்றியுரையுடன் பொதுக்கூட்டம் இனிதே நிறைவுற்றது.

 

14567332_1171319249613405_1812726819323344728_o14482013_1171320452946618_1054940596654259105_o14500612_1171337786278218_2535215411589432694_o14556564_1171337802944883_2197605900436506793_o14542406_1171373876274609_8337870136172888669_o14560079_1171319326280064_6704361092341241438_o14556588_1171381652940498_2851206286763377599_o14524582_1171381656273831_5335887292243281903_o 14500321_1171373032941360_8605123694017863283_o 14481997_1171374092941254_1562183504559682554_o 14480499_1171382072940456_3314493488905018365_o

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *