Breaking News

“வெறுப்பு அரசியலை நிறுத்து” – மதுரையில் தடையை மீறி எழுச்சியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!

மத்திய பாஜக அரசே! வெறுப்பு அரசியலை நிறுத்து (Stop Politics Of Hate) என்ற தேசம் தழுவிய பிரச்சாரம் 2016 செப்டம்பர் 1 முதல் 30 வரை பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம்  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக 30.09.2016 அன்று மதுரையில் மத்திய பாஜக அரசின் வெறுப்பு அரசியலுக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் காவல்துறையினரிடம் முறையாக அணுகி ஆர்பாட்டத்திற்கு அனுமதி கோரப்பட்டது. காவல்துறையோ ஜனநாயக ரீதியான இந்த ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தது. எனவே மதுரையில் தடையை மீறி எழுச்சியுடன்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் M.முஹம்மது இஸ்மாயில், SDPI கட்சியின் மாநில துணைத்தலைவர் நெல்லை M.முபாரக், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், மற்றும் பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைதாகி பின்பு விடுதலை செய்யப்பட்டனர்.

 

14481939_1800327333535783_1790043314391549655_o14500747_1800327173535799_6460372362591253847_o14525067_1800327253535791_4222457111169406932_o14435293_1800327686869081_8001058907798685424_o14542397_1800327550202428_4404950290927690625_o14435424_1800327693535747_1605435146005960622_o

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *