“வெறுப்பு அரசியலை நிறுத்து” – இராமநாதபுரத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி!
நாட்டில் உள்ள கல்வியாளர்கள், அறிவு ஜீவிகள், சிந்தனையாளர்கள், அறிவியலாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், அரசியல் நிபுனர்கள், பொருளாதார வல்லுநர்கள் என அனைத்து தரப்பினரும் கவலைப்படும் அளவிற்கு நாட்டை அசாதாரணமான சூழ்நிலைக்கு இட்டு செல்லும் மத்திய பாரதிய ஜனதா அரசின் வெறுப்பு அரசியலுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக “வெறுப்பு அரசியலை நிறுத்து” (Stop Politics of Hate) என்ற தலைப்பில் செப்டம்பர் 1 முதல் 30 வரை தேசிய அளவில் கன்னியாகுமரி முதல் புதுடெல்லி வரை நடைபெறும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இராமநாதபுரத்தில் 24-09-2016 அன்று ஆப்பிள் மினி ஹாலில் மாபெரும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கருத்தரங்கத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பசீர் அலி அவர்கள் தலைமை வகித்தார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் A. முஹம்மது யூசுப் M.A M.L, SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இதனைத் தொடர்ந்து சமுதாய நலனில் ஆர்வமுள்ள சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியின் பிரமுகர்கள், சமுதாய தலைவர்கள், மார்க்க அறிஞர்கள், வழக்கறிஞர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை ஆக்கபூர்வமாக வெளிப்படுத்தி கலந்துரையாடினர்.