Breaking News

உடன்குடியில் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம்!

நாட்டில் உள்ள கல்வியாளர்கள், அறிவு ஜீவிகள், சிந்தனையாளர்கள், அறிவியலாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், அரசியல் நிபுனர்கள், பொருளாதார வல்லுநர்கள் என அனைத்து தரப்பினரும் கவலைப்படும் அளவிற்கு நாட்டை அசாதாரணமான சூழ்நிலைக்கு இட்டு செல்லும் மத்திய பாரதிய ஜனதா அரசின் வெறுப்பு அரசியலுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக “வெறுப்பு அரசியலை நிறுத்து” (Stop Politics of Hate) என்ற தலைப்பில் செப்டம்பர் 1 முதல் 30 வரை தேசிய அளவில் கன்னியாகுமரி முதல் புதுடெல்லி வரை நடைபெறும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் டவுண் உடன்குடியில் 18.09.2016 அன்று மாலை மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் A.செய்யது பாசில் சமீர் தலைமை வகித்தார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்செந்தூர் பகுதி தலைவர் சேக் ஸாகிப் ரூமான் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

SDPI கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் சேக் அஸ்ரப் அலி பைஜி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் உஸ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிடர் விடுதலை கழக பரப்புரை செயலாளர் தோழர் பால் பிரபாகரன், SDPI கட்சியின் மாநில துணைத்தலைவர் நெல்லை முபாரக், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் முஹைதீன் அப்துல் காதர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் முஹைதீன் அப்துல் காதர் இன்று இந்திய தேசத்தில் நிலவி வரும் சிறுபான்மை விரோத போக்கையும், மாட்டின் பெயரால் முஸ்லிம்கள் மீதும் தலித்துகள் மீதும் வன்முறையை இந்து மதவெறி அமைப்புகள் கட்டவிழ்த்துவிட்டு வரும் நிலையில் பசுப்பாதுகாப்பு குண்டர் படைகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளித்துள்ள மஹாரஷ்டிரா மற்றும் ஹரியானா அரசுகளை கண்டித்தும், சங்கபரிவார தலைவர்களின் வெறுப்பு பேச்சுகளையும் கட்டாய மதமாற்றம் போன்ற வெறுப்பு பிரச்சாரங்களையும் பொது மக்களிடம் விளக்கிப் பேசினார்.

மேலும் அவர் தேசிய புலனாய்வு அமைப்பான NIA மோடி அரசின் கைப்பாவையாக செயல்படுவதையும், அரசு நிர்வாகத்தில் ஆர்.எஸ்.எஸ்-ன் தலையீடுகளையும் குறிப்பாக நாட்டின் முக்கிய பொறுப்புகளில் ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் நியமிக்கப்படுவதையும், கல்வி மற்றும் நீதித் துறைகளில் காவிமயமாக்கப்படுதலையும், அதற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் நசுக்கப்படுவது தொடர்கதையாவதையும் குறிப்பிட்டு பேசினார்.

இத்தகைய சூழலில் இந்துத்துவ செயல்திட்டத்திற்கு எதிராக மதச்சார்பற்ற கட்சிகள் உறுதியான கொள்கை ரீதியான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும் என்றும், அனைத்து ஜனநாயக மற்றும் சட்ட ரீதியான வழிமுறைகளை உபயோகிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

மேலும் ஆர்.எஸ்.எஸ். சின் செயல்திட்டங்களை வெளிப்படுத்தி அவற்றை தடுப்பதற்கான முதன்மை பொறுப்பு முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் தலைவர்களுக்கு இருக்கிறது என்றும் அதில் அவர்கள் சமரசம் செய்யக்கூடாது என்றும் இந்திய முஸ்லிம்கள் நிலைமையை உணர்ந்து ஒன்றாக இனைந்து அனைத்து மதச்சார்பற்ற குழுக்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுடன் பணி செய்து அனைவரின் நீதி மற்றும் உரிமைக்காக போராட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உடன்குடி நகர தலைவர் ஹாஜா முஹைதீன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

 

DSC_1031DSC_1038DSC_1047DSC_1041 - CopyDSC_1037 - CopyDSC_1034 - Copy (2)DSC_1033DSC_1032 - Copy - CopyDSC_1048

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *