Breaking News

“மத்திய பாஜக அரசே! வெறுப்பு அரசியலை நிறுத்து!” – புதுவலசையில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா "வெறுப்பு அரசியலை நிறுத்து" என்ற முழக்கத்துடன் ஆளும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து தேசம் தழுவிய பிரச்சாரத்தை 2016 செப்டம்பர் 1 முதல் 30 வரை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசையில் 16.09.2016 வெள்ளிக்கிழமை அன்று மாலை 7 மணியளவில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் புதுவலசை வட்டார தலைவர் ஹமீது இப்ராஹிம் தலைமை தாங்கினார். சுக்கூர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ரிஸ்வான் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் பஷீர் அலி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில்,' ஆளும் மத்திய பா.ஜ.க அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி தலைவர்களின் தொடர்ச்சியான வெறுப்பு பேச்சுக்களையும், அதனை கண்டிக்காத மத்திய அரசின் மெத்தனப் போக்கையும் சுட்டிக் காட்டினார். மேலும் மதச்சார்பற்ற சக்திகள் இந்த விஷம பிரச்சாரத்தை ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து தியாகத் திருநாளை முன்னிட்டு உள்ளூர் இளைஞர்களுக்காக நடத்தப்பட்ட கைப்பந்தாட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசை முஸ்லிம் ஜமாத் பொருளாளர் ஜனாப். செய்யது அபுதாஹிர் வழங்கினார். மேலும் வெற்றி பெற்ற வீரர்களுக்கான பரிசுகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் பஷீர் அலி அவர்கள் வழங்கினார். சிறுவர்களுக்கான போட்டியில் வென்றவர்களுக்கு புதுவலசை வட்டார தலைவர் ஹமீது இப்றாகீம் பரிசுகளை வழங்கினார்.

இறுதியாக சாகுல் மீரான் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

 

20160916_195027IMG_20160917_001300_994IMG_20160917_004224_286

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *