Breaking News

சென்னையில் சிறைவாசிகளின் விடுதலையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுச்செயலாளர் பங்கேற்பு!

பத்து ஆண்டு சிறை தண்டனை முடித்த ஆயுள் சிறைவாசிகளை மத பேதம், இன பேதம் பார்க்காமல் விடுதலை செய்யக்கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பாக இன்று (09-09-2016) சென்னை சேப்பாக்கத்தில் ஒற்றை கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் M. முஹம்மது சேக் அன்சாரி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறைவாசிகளின் விடுதலையை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். 

மேலும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் மற்றும் இயக்கங்களின் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கொட்டும் மழையிலும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

 

IMG_20160909_171457414_HDRIMG_20160909_171531469_HDR

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *