Breaking News

“மத்திய பாஜக அரசே! வெறுப்பு அரசியலை நிறுத்து!” – சென்னை மண்ணடியில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்!

மத்திய பாஜக அரசே! வெறுப்பு அரசியலை நிறுத்து (Stop Politics Of Hatred) என்ற தேசம் தழுவிய பிரச்சாரம் 2016 செப்டம்பர் 1 முதல் 30 வரை பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பாக நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தென் சென்னை மாவட்டம் துறைமுகம் தொகுதி பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக 03/09/16 அன்று மாலை 6:30 மணியளவில் மண்ணடி மூா்தெரு சந்திப்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் துறைமுகம் தொகுதி தலைவா் AKJ.அப்துல் காதா் தலைமை தாங்கினார். தென்சென்னை மாவட்ட தலைவா் அப்துல் அஜிஸ், SDPI கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவா் ஐுனைத் அன்சாரி மற்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவா் முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநிலப் பேச்சாளா் J.முகம்மது நாஐிம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

20160903_202800 20160903_201800 20160903_200054 20160903_195755 20160903_195705 20160903_195230 20160903_201122 20160903_195024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *