Breaking News

நாகர்கோவிலில் எழுச்சியுடன் துவங்கியது வெறுப்பு அரசியலை நிறுத்து தேசிய பிரச்சாரம்!

மத்தியில் பி.ஜே.பி. அரசு பொறுப்பு ஏற்றதிலிருந்தே அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் பாசிச பயங்கரவாத தலைவர்கள் இந்திய இறையாண்மையை பாதிக்கின்ற வகையில், இந்திய மக்களுக்கு இடையில் பாகுபாட்டை ஏற்படுத்தும் வகையில் துவேஷ கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.

இதனால் சமூக ஆர்வலர்கள் மிரட்டப்பட்டும், கொலை செய்யப்படுவதும், அப்பாவி மக்கள் பல சொல்லொணா கொடுமைகளை சந்திப்பதும் இந்திய நாட்டில் தினசரி செய்தி ஆகி விட்டது.

எனவே, இந்திய இறையாண்மையை பாதுகாக்கும் வகையிலும், இந்திய மக்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதை பறைசாற்றும் நோக்கத்தில், மததுவேஷ வெறுப்பு பிரச்சாரங்கள் செய்யும் பாசிச சங்கபரிவார சக்திகளின் பிரிவினைவாத சதித் திட்டங்களை மக்களுக்கு எடுத்து சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “STOP POLITICS OF HATE – வெறுப்பு அரசியலை நிறுத்து!” என்கிற முழக்கத்துடன் குமரி முதல் டெல்லி வரை தேசிய அளவிலான பிரச்சாரம் செப்டம்பர் 1 முதல் 30 வரை நடைபெற உள்ளது.

இந்த பிரச்சாரத்தில் பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், கருத்தரங்குகள், சமூக ஆர்வலர்களுடனான சந்திப்புகள், துண்டு பிரசுரங்கள், சுவரொட்டி பிரச்சாரம் போன்றவை தமிழகம் முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த பிரச்சாரத்தின் துவக்கமாக செப்டம்பர் 1ம் தேதி நாகர்கோவில் கோட்டாறு இளங்கடையில் வைத்து மாபெரும் பொதுக்கூட்டம் இன்று (01-09-2016) மாலை 05.30 மணிக்கு நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் எம். முகம்மது இஸ்மாயில் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் முஹைதீன் அப்துல் காதர் வரவேற்புரையாற்றினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொது செயலாளர் முகம்மது ஷேக் அன்சாரி, நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் தேசிய துணைத்தலைவர் பாத்திமா ஆலிமா, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் ஷேக் நூறுத்தீன், எஸ்.டி.பி.ஐ.கட்சியின் மாவட்ட தலைவர் சுல்ஃபிக்கர் அலி, குமரி மாவட்ட ஜமாத் கூட்டமைப்பு தலைவர் அப்துல் லத்தீப், பொது செயலாளர் எம்.ஏ.கான், இனையம் சர்வதேச துறைமுக எதிர்ப்பு குழு தலைவர் டல்லஸ் மற்றும் ஜமாத் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், சமுதாய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷெரீஃப், தேசிய பொது செயலாளர் முகம்மது அலி ஜின்னா, தேசிய செயற்குழு உறுப்பினர் கரமன அஸ்ரஃப் மவுலவி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத்தலைவர் நெல்லை முபாரக், பச்சை தமிழகம் மாநில தலைவர் சுப.உதயக்குமார், மதசார்பற்ற ஜனதா தள மூத்த தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ முகம்மது இஸ்மாயில், நாகர்கோவில் இஸ்லாமிய கலாச்சாரப்பள்ளி தலைமை இமாம் சவுக்கத் அலி உஸ்மானி, சுதந்திர போராட்ட வீரர் கொடிக்கால் சேக் அப்துல்லா, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எம்.சி.ராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் குமரி மாவட்ட தலைவர் ஷேக் நூறுத்தீன் நன்றியுரையாற்றினார். இந்த பொதுக்கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

14199563_1169728309764922_6111583804391952740_n14192747_1169731616431258_4078883102474860506_n14183671_1169755349762218_6248448237420773339_n14212630_1169839889753764_3318000568011645876_n14225611_1169817646422655_7991841162750803176_n14138732_1169856296418790_9044199227045004224_o14195183_1169846496419770_800936402372921631_o 14196117_1169874619750291_1685600955024635603_o 14138719_1169824773088609_2019905111359318021_o 14206157_1169819829755770_8340810036515687395_o 14212210_1169762046428215_7983811424550118001_n14195438_1169737263097360_1071429540109474149_o14233254_1169753753095711_5024088989520632656_n14192059_1169770859760667_7025351805773200740_n

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *