Breaking News

தேவதானப்பட்டி நகரம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டம்!

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி நகரம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக 28-08-2016 அன்று மாலை 07.00மணிக்கு தேவதானப்பட்டி பள்ளிவாசல் மண்டபம் அருகில் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் S. சகுபர் சாதிக் அவர்கள் தலைமை தாங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்J.அஹமது பாசித் அவர்கள் வரவேற்புரையாற்றினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேனி மாவட்டம் தலைவர் A.யாசர் அரபாத், தேவதானப்பட்டி ஜமாஅத் தலைவர் K. Mஅப்துல் கபார்கான் ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் M.M சையது இஸ்மாயில் அவர்கள் முன்னிலை வகித்தனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில போச்சாளர் J. முஹம்மது நாஸிம், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் செயற்குழு உறுப்பினர் AR சைய்யது முஹம்மது உஸ்மான் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இறுதியாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் R. முஜிப் ரஹ்மான் நன்றியுரையாற்றினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

 

14102291_1139078412837489_4053182871742524894_n 14202737_1139078399504157_7392978803468531934_n 14202543_1139078489504148_7168040838308449089_n 14199336_1139078416170822_4625968670572732396_n

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *