Breaking News

கஷ்மீர் மக்கள் மீதான அரசபயங்கரவாதத்தை கண்டித்தும் கருப்புச்சட்டத்தை (AFSPA) திரும்ப பெற வலியுறுத்தியும் சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக சென்னையில் கஷ்மீர் மக்கள் மீதான அரச பயங்கரவாதத்தை கண்டித்தும் கருப்புச்சட்டத்தை (AFSPA) திரும்பபெற வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (27-07-2016) மாலை 04.30 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் A. ஹாலித் முஹம்மது அவர்கள் தலைமை தாங்கினார்.

இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் M. முஹம்மது இஸ்மாயில், SDPI கட்சியின் மாநில தலைவர் K.K.S.M. தெஹ்லான் பாகவி, NCHROவின் தேசிய தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள், செயல்வீரர்கள், பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

 

DSC_0012DSC_0030DSC_0060DSC_0081DSC_0095DSC_0114DSC_0115DSC_0119DSC_0140DSC_0010DSC_0031DSC_0050

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *