Breaking News

மதவாத பா.ஜ.க. அரசை கண்டித்து வேலூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

டாக்டர்.ஜாகீர் நாயக் மற்றும் அசதுதீன் உவைசி ஆகியோர் மீது அவதூறு பரப்பும் மதவாத பா.ஜ.க அரசை கண்டித்து 15.07.2016 அன்று வேலூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வேலூர் தலைமை தபால் நிலையம் அருகில் மாவட்ட தலைவர்முகம்மது பயாஸ் அவர்களது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வேலூர் மாவட்ட செயலாளர் அ. ஷம்சுல் ஹுதா பாகவி, SDPI கட்சியின் வேலூர் மாவட்ட தலைவர் J. முஹம்மது ஆசாத், MIM கட்சியின் மாநில தலைவர் G.S. இக்பால், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் முஹம்மது ஜாபர், முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த முஹம்மது ஹனிஃப் (MC), மௌலானா அப்பாஸ் சிராஜி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

 

13767280_880709545406167_4154378987587338138_o 13767195_880708938739561_2164043066356968504_o 13765758_880709378739517_8149538721971659771_o 13738180_880709255406196_6612642645933030567_o 13735031_880709535406168_2024495709270967619_o 13730832_880709262072862_8461948140105189692_o 13724839_880708932072895_2328248644578423075_o 13698248_880709165406205_2680862267478694449_o

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *