Breaking News

நெல்லையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி!

நெல்லை மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் இலவச டியூசன் சென்டரில் வைத்து நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நெல்லை தொகுதி தலைவர் P.முஹமது அசனார் தலைமை வகித்தார். பேட்டை நகர தலைவர் L.சேக் முஹமது சாலி வரவேற்புரையாற்றினார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் நெல்லை தொகுதி தலைவர் N.முஹமது காசிம், காயிதேமில்லத் கல்வி சங்க தலைவர் ஜனாப் தக்கரை பீர் முஹமது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் N.இலியாஸ் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் S.அஹமது நவவி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் S.அஹமது நவவி குறிப்பிடும் போது கல்வி அறிவு தான் ஒரு மனிதனை சமூகத்தில் சிறந்தவனாக மாற்றுகிறது. கல்வி அறிவு இல்லாத பலரும் போதை, கஞ்சா மற்றும் பல்வேறு குற்ற செயல்களுக்கு ஆளாகின்றனர். எனவே பெற்றோர்கள் அனைவரும் தம் குழந்தைகள் பள்ளிக்கல்வி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வருடந்தோறும் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல் மற்றும் உயர்கல்வி உதவித்தொகை வழங்குதல் போன்ற பணிகளை தேசம் முழுவதும் பல ஆண்டுகளாக செய்து வருகிறோம். மேலும் நெல்லை மாவட்டம் ரஹ்மான்பேட்டை பகுதி குழந்தைகள் அனைவரும் அடிப்படைகல்வி பெறுவதை உறுதி செய்யும் வகையிலும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களை முன்னேற்றும் வகையிலும் பல்வேறு திட்டங்களை ரஹ்மான்பேட்டையின் சொந்த வளங்களை பயன்படுத்தி நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை பாப்புலர் ஃப்ரண்ட் மேற்கொள்ளும் எனவும் கூறினார்.

நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் சுத்தமல்லி பகுதி தலைவர் சேக் முஹமது பயாஸ் நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்வில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் 49 வ்து வார்டு செயலாளர் ஜெய்லானி, பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள், எஸ்.டி.பி.ஐ கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

 

IMG_20160605_19285620160605_195536IMG_20160605_20053620160605_200535

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *