Breaking News

திருவள்ளூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பள்ளி செல்வோம் விழிப்புணர்வு பேரணி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “பள்ளி செல்வோம்” என்ற பிரச்சாரத்தின் மூலம் மே முதல் ஜூன் வரை தேசிய அளவில் தொடர் பிரச்சாரம் செய்து வருகிறது. இதன் மூலம் கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இடை நிறுத்தம் செய்த மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதும், கல்வி விழிப்புணர்வு பேரணி நடத்துவதும் மற்றும் மாணவர்களுக்கு தேவையான பள்ளி உபகரணங்கள் வழங்குவதும் என தேசம் முழுவதும் பல சமூக நலபணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளி உபகரணங்கள் தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வழங்கி வருகிறது.


இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் நகர பாப்புலர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக பள்ளி செல்வோம் விழிப்புணர்வு பேரணி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (05-06-2016) செங்குன்றம் பகுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அம்பத்துர் நகர தலைவர் முகைதீன் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் A. நாகூர் மீரான் மற்றும் திருவள்ளூர் மாவட்ட தலைவர் A. நவ்பில் B.Tech, B.L ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 90 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

 

IMG_20160605_094953930 IMG_20160605_101622295_HDR IMG_20160605_101506844 IMG_20160605_102253467IMG_20160605_101433038_HDRIMG_20160605_095039506

 

 

 


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *