Breaking News

சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பள்ளி செல்வோம் மாநில விழிப்புணர்வு பிரச்சார துவக்க நிகழ்ச்சி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “பள்ளி செல்வோம்” என்ற பிரச்சாரத்தின் மூலம் மே முதல் ஜூன் வரை தேசிய அளவில் தொடர் பிரச்சாரம் செய்து வருகிறது. இதன் மூலம் கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இடை நிறுத்தம் செய்த மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதும், கல்வி விழிப்புணர்வு பேரணி நடத்துவதும் மற்றும் மாணவர்களுக்கு தேவையான பள்ளி உபகரணங்கள் வழங்குவதும் என தேசம் முழுவதும் பல சமூக நலபணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளி உபகரணங்கள் தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வழங்கி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக சென்னையில் பள்ளி செல்வோம் மாநில விழிப்புணர்வு பிரச்சார துவக்க நிகழ்ச்சி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி 05-06-2016 அன்று மாலை 05.15 மணிக்கு சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பென்சினர்ஸ் லேனில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வட சென்னை மாவட்ட தலைவர் A.முஹம்மது ரபிக் ராஜா அவர்கள் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது பயாஸ், மாநில மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் M. அப்துல் ரஜாக், மாநில சமூக மேம்பாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர் அம்ஜத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர்  ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் M.முஹம்மது சேக் அன்சாரி, ஜமாலியா அரபிக் கல்லூரி முதல்வர் நயாஸ் அஹமது ஆகியோர்  சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

 

13325609_1304119666284458_8611999774473451112_n13325700_1304120202951071_1141880512667601902_n 13327405_1304120316284393_7860318102090264811_n13335752_1304119826284442_1919810958234672234_n13346440_1304119896284435_7619542836861911077_n13335692_1304119916284433_4863578184927350630_n
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *