Breaking News

சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பள்ளி செல்வோம் விழிப்புணர்வு பேரணி!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “பள்ளி செல்வோம்” என்ற பிரச்சாரத்தின் மூலம் மே முதல் ஜூன் வரை தேசிய அளவில் தொடர் பிரச்சாரம் செய்து வருகிறது. இதன் மூலம் கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இடை நிறுத்தம் செய்த மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதும், கல்வி விழிப்புணர்வு பேரணி நடத்துவதும் மற்றும் மாணவர்களுக்கு தேவையான பள்ளி உபகரணங்கள் வழங்குவதும் என தேசம் முழுவதும் பல சமூக நலபணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளி உபகரணங்கள் தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வழங்கி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக சென்னையில் பள்ளி செல்வோம் விழிப்புணர்வு பேரணி இன்று (05-06-2016) காலை 09.30 மணிக்கு சென்னை கொருக்குப்பேட்டையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வட சென்னை மாவட்ட தலைவர் A.முஹம்மது ரபிக் ராஜா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பள்ளி செல்வோம் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கிவைத்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

DSC_0231DSC_0219DSC_0216

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *