Breaking News

குமரி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் ஹோலி கிராஸ் மருத்துவமணை சார்பாக நடைபெற்ற மருத்துவ முகாம்!

குமரி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் நாகர்கோவில் ஹோலி கிராஸ் மருத்துவமனை சார்பாக திருவிதாங்கோடு எம்.எஸ்.பி திருமண மண்டபத்தில் வைத்து மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பிரபல வெளிநாடு மற்றும் இந்திய மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மருத்துவ முகாமிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் குமரி மாவட்ட தலைவர் ஷேக் நூறுத்தீன் தலைமை தாங்கினார். இந்த முகாமை திருவிதாங்கோடு ஜமாஅத் தலைவர் ஷாகுல் ஹமீது துவங்கி வைத்தார். பாப்புலர் ஃப்ரண்டின் குமரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஸாக் இந்நிகழ்ச்சியை ஒருங்கினைத்தார். திருவிதாங்கோடு ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தக்கலை நகர தலைவர் ஷெரீப் நன்றியுறையாற்றினார். இந்த மருத்துவ முகாமில் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

ஹோலிகிராஸ் மருத்துவ மனையை சேர்ந்த பிரபல மருத்துவர்கள் மற்றும் அமொரிக்காவை சார்ந்த புற்றுநோய் சிறப்பு மருத்துவர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவ நிபுணர்களும் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *