Breaking News

திருப்பூரில் எழுச்சியுடன் நடைபெற்ற ஒற்றுமை பேரணி மற்றும் பொதுக்கூட்டம்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உதய தினமான பிப்ரவரி – 17 ஐ பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக ஆண்டுதோறும் பல்வேறு சேவைகள், கொடியேற்றம் மற்றும் தேசம் முழுவதும் ஒற்றுமைப்பேரணி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பாப்புலர் ஃப்ரண்ட் இந்நாளை கொண்டாடுகிறது. இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு வேற்றுமையில் ஒற்றுமையை உயர்த்திப் பிடிப்போம் என்ற முழக்கத்தோடு இந்தியாவின் ஜனநாயகத்தையும், பன்முகத்தன்மையையும் உயர்த்திப் பிடிக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்களின் சீருடை அணிவகுப்பை திருப்பூர் மாவட்டம் வேலன் ஹோட்டல் அருகில் சரியாக மாலை 3.00 மணிக்கு பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பொருளாளர் T.M.இப்ராஹீம் பாதுஷா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பேரணியை தொடர்ந்து கே.என்.பி.காலனியில் 4.30 மணிக்கு மாபெரும் எழுச்சிப் பொதுக்கூட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் திருப்பூர் மாவட்ட தலைவர் B.முபாரக் பாஷா தலைமையில் துவங்கியது. மாவட்ட செயலாளர் M.நூருல்ஹசன் வரவேற்புரையற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு உறுப்பினர் A.S.இஸ்மாயில், மாநில பொதுச்செயலாளர் M.முஹம்மது ஷேக் அன்சாரி, SDPI கட்சியின் மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி, தந்தை பெ.தி.க. மாநில பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், NWF மாநில செயலாளர் N.பாத்திமா, மற்றும் பாப்புலர் ப்ரண்டின் மாநில துணைத்தலைவர் A.ஹாலித் முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பொதுச்செயலாளர் M.முஹம்மது ஷேக் அன்சாரி அவர்கள் தன்னுடையா உரையில் “ இன்று இந்திய தேசம் முழுவதும் மக்களின் சுதந்திரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்பதை நாடு முழுவதும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைகழக மாணவர்கள் அச்சுறுத்தப்படுவதிலிருந்து நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. அதுபோலவே தமிழகத்திலும் மக்களின் அடிப்படை உரிமைகளை பெறுவதற்காக நீதிமன்றத்தையே நாடவேண்டி உள்ளது. ஏனென்றால் இந்த நிகழ்ச்சிக்கும் கூட காவல்துறையும், அரசும் பல்வேறு நெருக்கடிகள் கொடுத்ததையடுத்து நாம் நீதிமன்ற அனுமதியை பெற்றே நடத்துகின்றோம் என்றும், அதுபோலவே தமிழக மக்கள் அவினாசி அத்திக்கடவு குடிநீர்த் திட்டம், கெயில் எண்ணைக்குழாய் திட்டம், அரசு ஊழியர் போராட்டம், ஆயுள் சிறைவாசிகள் விடுதலை, தமிழக மீனவர் பிரச்சனை என மக்கள் தினந்தோறும் வீதிவீதியாக போராடும் சூழ்நிலையையே தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த நிலையை வருகின்ற காலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மக்களுடன் இணைந்து நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும்” என்றார்.

இறுதியாக பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு உறுப்பினர் A.S.இஸ்மாயில் அவர்கள் பேசும்போது “ இந்திய பூமியில் அநீதிக்குள்ளாக்கப்படும் சமூகத்திற்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வந்த பூரண சந்திரனே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்றும், நமது தேசத்தில் ஆட்சி செய்யும் நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக அரசாங்கம் இந்துத்துவாவின் மாதிரியே. இது இந்தியாவின் பன்முகத்தன்மையை அழித்து சம உரிமை மற்றும் நீதியில்லாத இந்துத்துவா தேசத்தை உருவாக்கும் நோக்கில் செயல்படுகிறது. எனவே அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும், அடக்குமுறைக்குள்ளாக்கபடும் சமூகங்கள் இந்த பாசிசத்தை எதிர்கொள்ள நீதியை நிலைநாட்ட ஓரணியில் ஒன்றிணைய வேண்டும்” என அறைகூவல் விடுத்தார்.

 

12716394_1082613465113649_5708560164058611557_o12747300_1082613525113643_4930619286092878520_o12716228_1082613675113628_1411305164259534933_o11261493_1082613435113652_1242673941954298338_o12715844_1082615745113421_7304479490183263884_o 12716180_1082614931780169_3196932925846594913_o 860595_1082613598446969_6482549115573484769_o 10387009_1082614935113502_4698978042910863378_o 12371248_1082613548446974_5728148874683352257_o 11823005_1082614765113519_8788180772094464218_o 12710766_1082614941780168_6023775890209690781_o 12747870_1082613711780291_477237447888747886_o 12764508_1082614758446853_920752559602174508_o12715887_1082615065113489_3960793866194592531_o 12716329_1082615051780157_5336772929204938030_o 12747428_1082611625113833_1376439828377285755_o 12747940_1082612068447122_6703374131300577004_o921384_1082616018446727_7111885539612547940_o12719241_1082611621780500_5767949323634101180_o12719115_1082616215113374_2144268619893157976_o 12719525_1082616235113372_6272016383537023474_o 12716245_1082615765113419_4863136458958545868_o 12715954_1082615275113468_6925055796684145427_o 12697245_1082615995113396_2679264928229640665_o 12711163_1082615875113408_9159624920037661188_o 12671647_1082616321780030_7778167200217652811_o 10603925_1082616435113352_669328580511112231_o

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *