Breaking News

பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு மாநில தலைமை அலுவகலத்தில் கொடியேற்று விழா நிகழ்ச்சி!

20150220212444

இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக நாடு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக கொடியேற்ற நிகழ்ச்சிகள், மக்கள் நல பணிகள், மருத்துவ முகாம்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மூலமாக மக்களின் உரிமைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்.

இதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில தலைவர் மு. முஹம்மது இஸ்மாயில் அவர்கள் இன்று (17-02-2015) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைமை அலுவலகத்தில் கொடியேற்றி வைத்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *