Breaking News

சாக்ஷி மகாராஜ்: ஃபாசிச வெறுப்பு அரசியலின் ஊற்று! – வலசை ஃபைஸல்

20150617162653

இந்திய தேசத்தில் சுத்தந்திரம், நீதி, பாதுகாப்பு என்றால் என்ன என்று கேள்வி எழுப்பும் மனிதம் மரித்த மடையர்கள் கையில் இந்தியா அகப்பட்டுக் கொண்டு அல்லோலகல்லோலப்படுகிறது. பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைத்ததற்கு பிறகு வேற்றுமையில் ஒற்றுமை என்னும் இந்திய நாட்டின் பெருமை குழி தோண்டி புதைக்கப்பட்டு வருகிறது. மனித இரத்தத்தின் ருசி பார்க்கும் சாத்தான்கள் கையில் இந்த தேசம் மாட்டிக் கொண்டுள்ளது என்பதை பாமர மக்களும் அறிந்து கொள்ளும் ஒரு சூழல் உருவாகி இருக்கிறது.

இதற்கு அடையாளமாக வெறுப்பை விதைத்து அதன் மூலம் மனித உயிர்களை அறுவடை செய்யலாம் என்ற கலவர எண்ணத்துடன் பல கயவர்களும், குற்றவாளிகளும் அரியணையில் அமைச்சர்கள் ஆக்கப்பட்டு அழகு பார்க்கப்படுகின்றனர்.

அதில் முதலிடத்தை பிடிப்பதற்கு கடும் முயற்சி எடுத்துவருபவர் சச்சிதானந்த் ஹரி சாக்ஷி எனும் சாக்ஷி மகாராஜ்.

இவர் பி.ஜே.பி-யின் வேட்பாளராக உத்திர பிரதேச மாநிலம் உன்னவ் என்னும் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகியவர்.

சிறு வயதிலேயே ஆர்.எஸ்.எஸ் சங்கப் பரிவார வெறுப்பு கொள்கைகளுடன் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்ட சாக்ஷி, தனது அரசியல் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தை 1985-களில் தொடங்குகிறார். 1991-ல் மதுரா தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இரண்டாவது முறையாக 1996-ல் ஃபரூக்காபத் என்னும் தொகுதியில் இரண்டாவது முறையாக தேர்வாகிறார். 1998-ல் மீண்டும் அதே தொகுதியில் வெற்றி பெற்று மூன்றாம் முறையாக மக்களவை உறுப்பினராக தொடர்ந்திருக்கிறார்.

1998 முதல் 98-ம் வருடம் வரையில் உத்திர பிரதேச மாநிலத்தின் முக்கிய பொறுப்புகளை சாக்ஷி வகித்துள்ளார்.

Committee on Home Affairs and its Sub – Committee on Swatantrata Sainik Samman Pension Scheme, Member of Consultative Committee – Ministry of Human Resource Development, Member of Informal Consultative Committee on Northern Railways – Ministry of Railways என பல முக்கிய துறைகளில் அங்கம் வகித்துள்ளார். அதன் பிறகு மீண்டும் 2014-ல் நடைபெற்ற தேர்தலில் உன்னவ் தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்கு பெயர் போனவர் என்று பத்திரிகைகளில் இன்று பிரபலமாக்கட்டு வரும் சாக்ஷி மகாராஜை நாளைய பிரதம வேட்பாளர் என்று அறிவித்தாலும் ஆச்சரியம் அடைவதற்கு ஒன்றும் இல்லை. காரணம் இன்றைய பாரத பிரதமர் மீது எப்படி கொலை குற்ற கலவர வழக்குகள் நிலுவையில் உள்ளதோ அதே போன்று இந்த சர்ச்சை புகழ் சாக்ஷி மீதும் இருக்கின்றது.

கற்பழிப்பு, கொலை, கொள்ளைக்கு பெயர் போன இயக்கமான ஆர்.எஸ்.எஸ்.ஸின் விசுவாச ஊழியரும் இன்றைய பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான சாக்ஷி மகாராஜ் கடந்த 2000-ம் ஆண்டு ஒரு பெண் கல்லூரி முதல்வரை கற்பழித்த குற்றவாளி. அந்தப் பெண்ணும் அவரது உதவியாளரும் ஆக்ராவிலிருந்து ஈதாஹ் நோக்கி வந்து கொண்டிருந்த போது சாக்ஷி மகாராஜும் அவரது இரண்டு மருமகன்களும் இணைந்து பெண்ணின் உதவியாளரை தாக்கி அப்பெண்ணை கூட்டு கற்பழிப்பு செய்ததாக ஈதாஹ் காவல்நிலையத்தில் கற்பழிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு திகார் சிறைச் சாலையில் அடைக்கப்பட்டார். தனது அரசியல் செல்வாக்கின் மூலம் ஒரு மாதத்தில் விடுதலை அடைந்துள்ளார்.

சாக்ஷி ஃபரூக்கபாத்தில் தான் நடத்தி வந்த ஆசிரமத்தில் வைத்து 2004-ல் மணிப்பூரை சேர்ந்த பெண்ணை கற்பழித்துள்ளார். இதனை யுவ பீதி என்னும் இந்து பத்திரிகையின் ஆசிரியர் யோகேந்திர சிங் யாதவ் காவல்துறையின் கவனத்திற்கு எடுத்து சென்று வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

நாட்டிற்கு சேவையாற்றி வரும் சாக்ஷி கற்பழிப்போடு தனது பங்களிப்பை நிறுத்திக் கொண்டால் அது அவர் சார்ந்திருக்கும் கொள்கைக்கு இழுக்கு என்பதை உணர்ந்து கொலை செய்வதிலும் தான் சளைத்தவன் அல்ல என்பதை நீருபிக்கிறார். ஏப்ரல் 16, 2013-ல் தன் சகோதரர் மற்றும் இருவருடன் இணைந்து சுஜாதா வர்மா என்ற 47 வயது பெண்ணை கொலை செய்த வழக்கில் உதைபூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

1998-ல் நடந்த மக்களவை தேர்தலில் கள்ள ஒட்டு போடுவதற்கு பயங்கர ஆயுதங்களுடன் தனது அடியாட்களை அழைத்துக் கொண்டு வந்த சாக்ஷி காவல்துறையால் கைது செய்யப்பட்டு, ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார் என்பதை பத்திரிகையாளர் யோகிந்திர சிங் யாதவ் பதிவு செய்கிறார்.

1992 பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கிலும் சாக்ஷி மஹாரஜிற்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவை வெளியுலகிற்கு தெரிந்ததால் வழக்குகளாக்கப்பட்டன. இன்னும் தெரியாமல் பல குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர் என்பதை நிகழ்கால நடவடிக்கைகள் நமக்கு காட்டுகின்றன.

இன்றைய பாரதிய ஜனதாவில் அமைச்சர்களாக இருந்து வெறுப்புகளை உமிழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் குற்றப் பின்னணி கொண்டதாகவே இருக்க முடியும்.

அவர்கள் கொடுக்கும் அறிக்கைகள் அவசர கோலத்தில் அறியாமல் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் என்ற எண்ணம் நமக்கு இருந்தால் நாம் நமது சிந்தனையை இன்னும் சீரியதாக மாற்ற வேண்டும். இந்திய தேசத்தில் நடக்கும் அநியாய, அடக்குமுறையிலான, அந்நிய நாட்டிற்கு இந்திய தேசத்தை அடகு வைக்கும் அசிங்கமான ஆட்சியை மக்கள் விளங்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக சங்கப் பரிவார கூடாரத்தில் திட்டமிடப்பட்டு, வெறுப்பு கொள்கையின் வெளித்தோன்றல்களான ஃபாசிச சித்தாந்தத்தின் செயலாக்கம்தான் சாக்ஷி மகாராஜ் வகையறாக்கள்.

இவர்களது அனைத்து திட்டமிடலையும் நாம் அறிவோம். இந்த உலகிற்கும் அறிவிப்போம். இந்த நேரத்தில் இந்திய தேசத்தை சூழ்ந்துள்ள கறைகளை சுத்தம் செய்து சம நீதி படைத்திட போராடும் ஓர் இயக்கத்தின் தலைவர் உதிர்த்த வார்த்தைகள் நமக்கு படிப்பினையாக பொருந்தும். இதோ அந்த வரிகள்:

“ஓ ஃபாசிச சங்கப் பரிவாரங்களே! உங்கள் மொழிகளையும், உங்கள் செயல்களையும் நாங்கள் அறிவோம். உங்கள் இருப்பிடம் நோக்கி நாங்கள் விரைந்து வந்து கொண்டிருக்கின்றோம். உங்களது இருதயங்களுக்கு மிக அருகில் எங்களது காலடித் தடங்கள் பதியும். அன்று இந்திய தேசத்தில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் சுதந்திரம், நீதி, பாதுகாப்பு பிரகடனமாகும்!”

விரைவோம்…

வலசை ஃபைசல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *