Breaking News

தஞ்சையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாரத்தான் ஓட்டம்! : 3000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ப்பு!

20151023232156பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக "ஆரோக்கியமான மக்கள், வலிமையான தேசம்" தேசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சுகாதாரத்தை வலியுறுத்தி 5 கி.மீ. மாரத்தான் ஓட்டம் தஞ்சையில் கடந்த 18.10.015 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்டின் தஞ்சை மாவட்ட தலைவர் பைசல் முகம்மது தலைமை தாங்கினார். தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல் கேட் அருகே தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட தடகள சங்க தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சிறுவர், சிறுமியர் உட்பட சுமார் 3000க்கும் மேற்பட்டோர் இந்த மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் ஓட்டம் தஞ்சை அரண்மனை வளாகத்தில் நிறைவடைந்தது.

இந்நிகழ்ச்சியில் ஆண்கள் பிரிவில் நாகை தங்கவேல் முதலிடத்தையும், பூண்டி புஷ்பம் கல்லூரி மாணவர் மனோபாலன் இரண்டாவது இடத்தையும், திருவையாறு மதிவாணன் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

பெண்கள் பிரிவில் தஞ்சை மிரியம்மில்டா ஆர்கிட் முதலிடத்தையும், கும்பகோணம் அரசினர் பெண்கள் கல்லூரி மாணவி சுந்தரி இரண்டாவது இடத்தையும், தஞ்சை மேக்ஸ்வெல் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரதிக்ஷா மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் முஹம்மது ரசீன் அவர்கள் பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் சிங்காரவேலு, திருச்சி மாவட்ட தடகள சங்க தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் இடையில் டெல்டா மார்ஷியல் ஆர்ட்ஸ் குழுவினர் தற்காப்பு பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு டெமோ செய்து காட்டப்பட்டது

2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *