Breaking News

நெல்லை மாவட்டம் பத்தமடையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு மினி மாராத்தான் ஓட்டம்!

20141108204340“ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” (healthy people healthy nation) என்ற தேசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நெல்லை மாவாட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக 02-11-2014 அன்று பத்தமடையில் விழிப்புணர்வு மினி மாராத்தான் ஓட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு நகர தலைவர் அப்துல் சலாம் அவர்கள் தலைமை தாங்கினார். விழிப்புணர்வு மினி மாராத்தான் ஓட்டத்தை சேரன்மகாதேவி ஆய்வாளர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு மினி மாராத்தான் ஓட்டம் போட்டியில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

போட்டியில் முதல் இடம் பிடித்த மாணவருக்கு சேரை ஆய்வாளர் பாஸ்கரன் அவர்கள் முதல் பரிசை வழங்கினார்.

இரண்டாம் இடம் பிடித்த மாணவருக்கு பத்தமடை சார்பு ஆய்வாளர் ராமன் அவர்கள் பரிசு வழங்கினார்.

முன்றாம் இடம் பிடித்த மாணவருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நெல்லை மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஆரிப் அவர்கள் பரிசு வழங்கினார்.

நான்காம் இடம் பிடித்த மாணவருக்கு SDPI கட்சி அம்பை தொகுதி தலைவர் காசிம் அவர்கள் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் பத்தமடை 4 வது வார்டு கவுன்சிலர் அசன் காதர் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *