Breaking News

வாலிநோக்கத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற கைப்பந்துப்போட்டி

20141108194433பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் “ஆரோக்கியமான மக்கள்-வலிமையான தேசம்” என்ற தேசிய அளவிலான பிரச்சாரம் அக்டோபர்15 முதல் 30 வரை நடைபெற்றது.

இப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சாயல்குடி நகர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக அக் 29 ந்தேதி வாலிநோக்கத்தில் கைப்பந்துப்போட்டி நடைப்பெற்றது. அதில் சுற்றுவட்டாரத்தைச் சார்ந்த பதினான்கு கைப்பந்து அணியினர்கள் கலந்துக் கொண்டனர். அவ்விழாவினை வாலிநோக்கம் ஜமாத் தலைவர் ரஹமத்துல்லா அவர்கள் துவக்கி வைத்தார்.

இவ்விளையாட்டின் இறுதியாக போட்டியில் கலந்து பரிசுப் பெற்ற அணியினர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. முதல் பரிசை முஹம்மது பாய்ஸ் ஒப்பிலான் அணி வென்றது. இந்த பரிசினை ஒப்பிலான் ஜமாஅத் பொருளாளர் தஸ்தகீர் அவர்கள் வழங்கினார். இரண்டாம் பரிசை அமீர் ப்ரண்ட்ஸ் மாரியூர் அணி வென்றது. இந்த பரிசினை வாலிநோக்கம் ஜமாஅத் பொருளாளர் ரபீக் அவர்கள் வழங்கினார். மூன்றாம் பரிசை அல் அமீன் ஸ்கூல் வாலிநோக்கம் அணி வென்றது. இந்த பரிசினை மாரியூர் அமீர் அவர்கள் வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் எராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *