Breaking News

நாகை மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி வகுப்பு!

20141108193227

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் "ஆரோக்கியமான மக்கள்-வலிமையான தேசம்" என்ற தேசிய அளவிலான பிரச்சாரம் அக்டோபர்15 முதல் 30 வரை நடைபெற்றது.

இப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியில் வியாழன் (30/10/14) மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆரோக்கியத்தை வலியுறுத்தி திருப்பூண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா-வின் மூலமாக கற்றுக்கொடுக்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாகை மாவட்ட தலைவர் S.ரஃபீக் மரைக்காயர் அவர்கள் தலைமை தாங்கினார். திருப்பூண்டி முஸ்லிம் ஜமாஅத் செயலாளர் A,ஆசு புஹாரி, SDPI கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் L.முஹம்மது அக்பர் அலி, திருப்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் காரைக்கால் மாவட்ட செயலாளர் A.ஹஸன் குத்தூஸ் அவர்கள் சிறப்புரை வழங்கினார்.

இப்பயிற்சியில் திருப்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் திரளாக கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *