Breaking News

வி.களத்தூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம் மற்றும் பரிசளிப்பு விழா!

20141108192508பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” பிரச்சாரத்தின் இறுதி பகுதியாக 01.11.2014 அன்று மாலை 6.40 மணியளவில் தெருமுனைகூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தை S.நிசார் அலி அவர்கள் தொகுத்து வழங்கினார். நகர செயலாளர் M.சவுகத் அலி தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் G.அப்துல் ரஹீம் வரவேற்று பேசினார். செயற்குழு உறுப்பினர் சர்தார் பாஷா முன்னிலை வகித்தார். SDPI கட்சி தலைவர் M.முஹமது பாரூக் வாழ்த்துரை வழங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் M.அமீர் பாஷா அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் நிகழ்த்திய உரையில் ஆரோக்கியமான மக்கள், வலிமையான தேசம் பிரச்சாரத்தின் நோக்கங்களை விரிவாக எடுத்து கூறி பேசினார். கடந்த சில நாட்களாக நடைபெற்ற வாலிபால் போட்டி, கபாடி போட்டி, சிறுவர்கள் விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் நடுவர்களாக செயல்பட்டவர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர்.

இறுதியாக T.இஸ்மாயில் அவர்கள் நன்றயுரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *