வி.களத்தூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப இந்தியாவின் சார்பாக நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்ச்சி!
ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்’ என்ற பிரச்சாரத்தின் ஒருபகுதியாக வி.களத்தூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப இந்தியாவின் சார்பாக 27.10.2014 அன்று காலை 11.30 மணியளவில் வி.களத்தூர் பெண்கள் நடுநிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வி.களத்தூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் A.M.இஸ்மாயில் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் மரக்கன்று நட்டு சிறப்பித்தார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், சர்தார் பாஷா, முஹமது பாரூக், பைசல் அஹ்மத், நிசார் அலி, சையத் ஹுசைன், இஸ்மாயில், பாசித் ஆகியோர் கலந்து கொண்டனர்.