Breaking News

டெல்லி: சமூக நீதி மாநாடு – ஒன்று திரண்ட முஸ்லிம்கள் திணறிய தலைநகரம் – நவம்பர் 27 மாலை 1.00 மணி

20120806204103நவம்பர் 26 தேதி நடைபெற்ற நேஷனல் மில்லி கன்வென்சன் மற்றும் நேஷனல் செமினார் ஆகியவற்றைத் தொடர்ந்து 27ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் (Grand Public Meet) நடைபெற்றது. 20 மாநிலங்களிலிருந்து வந்திருந்த கல்வியாளர்கள், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள்,  முதியவர்கள் என இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இப்பொதுக்கூட்டம்  சரியாக மதியம் 1.00 மணி அளவில் ஒற்றுமை கீதத்துடன் துவங்கியது. பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொதுச் செயலாளர் கே.எம். ஷரீப் வரவேற்புரையாற்றினார். பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம் அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார்.
பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம் அப்துர் ரஹ்மான் உரை
‘நீதியின் தாகத்தினால்தான்’ கொள்கைகள் உருவாகின்றன. சமூக மாற்றத்திற்கான தேவை தூண்டப்பட்டு புரட்சிகளும், புரட்சியாளர்களும் உருவாகின்றனர். சமகால உலகத்தில் ஜனநாயகத்தின் தேடலில் ஜனநாயக ரீதியில் போராடியதையும், சில நேரங்களில் விரும்பத்தகாத நிகழ்வுகளை எகிப்தின் ‘தஹ்ரீர் சதுக்கத்திலிருந்து’ அமெரிக்காவின் ‘வால் ஸ்ட்ரீட்’ வரை பார்த்தோம்.
சமூக, அரசியல், பொருளாதார, நீதி கிடைக்காதவர்களின் வெளிப்பாடுதான் இது. தலைவர்கள் மக்களுக்கு நீதி வழங்க தவறும் போது இந்த தேசத்தின் ஒற்றுமை மற்றும் இறையாண்மை பாதிக்கப்படுகின்றது. ஆக “தேசத்தை நீதியால் கட்டமைப்போம்” என்ற இந்த மாநாடு இந்தியாவிலுள்ள அரசியல் சக்திகளுக்கு, நம்மை சுற்றி என்ன நடந்துகொண்டிருக்கின்றது என்பதனை உணர்த்தும் ஒரு பாடமாகும் என்பதை உணரச் செய்வதுமே ஆகும்.
காங்கிரஸும், பாரதிய ஜனதாவும் ஊழல் மற்றும் பல விஷயங்களில் நண்பர்களாகவே உள்ளனர். ஆளும் அதிகாரவர்க்கம் மற்றும் கார்பரேட் நிறுவனங்களுக்கிடையேயான உறவில் நம்முடைய இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு, தலித்கள், பழங்குடியினர்கள் தங்களின் வாழ்விடங்களை விட்டு துரத்தப்படுகின்றனர். முஸ்லிம்களோ மேலும், மேலும் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதும், நம்முடைய சமூக மக்கள் மீண்டும் ஒருமுறை பிரிக்கப்பட்டதற்கு காரணம் ஆகும். நம்முடைய தேசத்தின் மீது நீங்காத கரையாக உள்ளது. பாபரி மஸ்ஜித் இடிப்பாகும். அந்த வரலாற்று பிழை திருத்தப்பட வேண்டும். ஆனால், துரதிருஷ்டவசமாக நம்முடைய அரசியல் தலைவர்கள் வசதியாக அதனை மறந்துவிடவே விரும்புகின்றனர்.
நாம் நீதியின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவர்களாக, இந்த தேசத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக பாபர் மஸ்ஜித் மீண்டும் அந்த இடத்தில் கட்ட வேண்டும். மீடியாக்கள் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை கையில் எடுத்தது வரவேற்கத்தக்கதாகும். சொல்லப்போனால் மதவாதம் தான் மிகப்பெரிய ஊழலாகும். மதவாதம் தான் கழையப்பட வேண்டிய மிகப்பெரிய ஊழலாகும். ஊழலுக்கு எதிரான போராட்டம் பாசிஸத்தை இந்தியாவிலிருந்து துடைத்தெறிந்தால் மட்டுமே வெற்றி பெரும்.
நாட்டில் நடந்த 12 குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லிம்களே காரணம் என அவர்களை சிறையில் தள்ளி அழகு பார்த்த வேளையில் அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் காரணம் சங்கபரிவார சக்திகளே என்று கண்டுபிடித்தது. அதற்கு விலையாக தன்னுடைய இன்னுயிரையும் நீத்த மாவீரன் ஹேமந்த் கர்கரேக்கு  நம்முடைய மரியாதையை காணிக்கையாக்குகிறோம். இருப்பினும் நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லிம்களே காரணம் என்று ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை சட்டம் (க்அகஅ) போன்ற ஆள்தூக்கி சட்டங்களில் சிறையில் வாடுவது கவலைக்குரிய விஷயமாகும். அவர்களுக்கு பிணையும் கிடைக்கவில்லை.
எனவே, இம்மாநாட்டின் மூலமாக சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை சட்டம் மற்றும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (அஊகுகஅ) போன்றவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
அதேபோன்று நாட்டில் 1992 லிருந்து நடைபெற்ற அனைத்து குண்டு வெடிப்புகளையும் மீள் விசாரணை செய்து ஒரு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறோம்.
நாம் அனைத்து கட்சி தலைவர்களையும் கேட்டுக்கொள்வது என்னவென்றால் உறுதியான நிலைப்பாட்டுடன் நமது நாட்டின் மதச்சார்பற்ற தன்மை, இடஒதுக்கீடு போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும்.
லோக் ஜனசக்தியின் செக்ரட்டரி ஜெனரல். அப்துல் ஹாலிக் உரை 
ராம்விலாஸ் பஸ்வான் ஒரு நிகழ்ச்சி தொடர்பாக வெளியூர் சென்றிருந்த காரணத்தால் லோக் ஜனசக்தியின் செக்ரட்டரி ஜெனரல். அப்துல் ஹாலிக் அவர்கள் மாநாட்டில் உரையாற்றினார். அவர் தனதுரையில்,
தலித்துகளும், முஸ்லிம்களும் ஒருங்கிணைந்து நம்முடன் பட்டியல் இன மக்கள் (குஇ) மற்றும் பழங்குடியினரையும் இணைத்து ஒரணியில் நின்று நம்முடைய பிரதிநிதித்துவத்திற்காக போராட வேண்டும் என்றார்.
டில்லி ஃபதேஹ்பூரி மஸ்ஜித் ஸாஹி இமாம் டாக்டர் முஃப்தி முகர்ரம் அவர்கள் தனதுரையில்,
நீதிபதி ராஜேந்திரா சச்சார் கமிட்டி மற்றும் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் முஸ்லிம்கள் பட்டியலின மக்களை விடவும் கீழõன நிலையில் இருக்கின்றனர் என்பதை தெளிவாக சுட்டிக்காட்டிய பின்னரும் அந்த கமிட்டிகள் செய்த பரிந்துரையை செயல்படுத்தாமல் தாமதம் செய்வதற்கு எந்த காரணமும் இல்லை என்று சாடினார்.
முஸ்லிம்கள் தங்களின் உரிமைகளைப் பெற இனியும் தாமதியாது களத்திற்கு வரவேண்டும். களம் என்றால் அரசியல் களத்தில் இறங்கி சமூகத்தில் மாற்றங்களை, மறுமலர்ச்சியை கொண்டுவர வேண்டும். நீங்கள் அதனைச் செய்யத்தயார் என்றால் நானும் உங்களுடன் பயணிக்கத் தயார் என்றார்.

எஸ்.டி.பி.ஐ.ன் தேசிய தலைவர் இ.அபுபக்கர் அவர்கள் தனது உரையில், அளவற்ற அருளாளன்  , நிகரற்ற அன்பாளன் ஏக இறைவனின் திருப்பெயரால்…
இரண்டு வருடங்களுக்கு முன்பு 2009 ஆம் ஆண்டு பாப்புலர் ஃப்ரண்டின் மிகப்பெரிய மாநாட்டில் மனித கடலுக்கு மத்தியில் உரையாற்றினேன். இன்று இந்த மைதானத்தில் ஒங்கி உயர்ந்து நிற்கும் பனி மலை போன்று தோற்றமளிக்கும் ஜனத்திறள் மத்தியில் உறையாற்றிக்கொண்டிருக்கிறேன்.
நீங்கள் இங்கு பல மலைகள், குன்றுகள், ஆறுகள் தாண்டி வந்துள்ளீர்கள். பலர் தெற்கிலிருந்து வந்துள்ளீர்கள். பலர் வடக்கிலிருந்து வந்துள்ளீர்கள். நீங்கள் உங்களுடன் கிழக்கையும், மேற்கையும் கொண்டு வந்துள்ளீர்கள்.
நீங்கள் கடந்த காலங்களில் அனுபவித்த விரக்தியை, வெறுப்பை, அவநம்பிக்கையை தகர்த்தெறிய இங்கு வருகை புரிந்துள்ளீர்கள். சுதந்திர இந்தியாவில் 63 வருடங்களை வீணடித்துவிட்டு, எங்கே புகலிடம், எங்கே தஞ்சமடைவோம்? என்று கேள்விக்கணைகளுடன் இங்கு வந்துள்ளீர்கள்.
நான் உங்களை விழிப்புணர்வு பெற்றவர்கள் என்று குறிப்பிடுவதில் பெருமிதம் கொள்கிறேன். பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் இந்த மாபெரும் மாநாட்டில் நான் இங்கு எஸ்.டி.பி.ஐ. சார்பாக பேசிக்கொண்டிருக்கிறேன்.
நான் இங்கு ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகிறேன். அதாவது, பாப்புலர் ஃப்ரண்ட், எஸ்.டி.பி.ஐ. மற்றும் தலித் இயக்கங்கள் மூன்றாம் தலைமுறை இயக்கங்கள் ஆகும். இந்நாட்டில் உள்ள மற்ற இயக்கங்கள் முதல் தலைமுறை அல்லது இரண்டாம் தலைமுறை இயக்கங்கள் ஆகும்.
இரண்டாம் தலைமுறை மக்கள் தங்கள் சக்தியை பயன்படுத்தி ஒரு புதிய இந்தியாவை உருவாக்கும் வாய்ப்பை பெற்றிருக்கவில்லை. மற்றவர்களின் தலையாட்டி பொம்மைகளாகவே இருந்தனர். ஆனால், மூன்றாம் தலைமுறையினரோ நாம்தான் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என உணர்ந்தவர்ளாக, சமூக நீதி, சமூக விடுதலையை, அரசியல் அங்கீகாரத்தை கொண்டே பெறமுடியும் என்பதையும் உணர்ந்து கொண்டவர்கள். அவர்கள் கடந்த கால பாதிப்புகளின் நினைவுகளை கவலையுடன், உள்ளத்தில் உறுதியுடனும், நிதானத்துடனும் கால்களை எடுத்து வைத்து வருகின்றனர். மூன்றாம் தலைமுறையினர் கடந்த காலத்தின் கலைப் பொருட்களாக இல்லாமல் நிகழ்காலத்தை கட்டமைப்பவர்களாக மாறி வருகின்றனர்.
நம்முடைய அருமையான தேசம்  மதச்சார்பற்ற கொள்கைகளிலிருந்து விலகிச் சென்று கொண்டிருக்கின்றது. நம்முடைய மதச்சார்பற்ற தன்மை என்ற கொள்கை ஒரு குறுகிய வட்டத்திற்குள் சிக்கியுள்ளது.
முஸ்லிம்கள் அந்த குறுகிய வட்டத்தில் சிக்கி தனிமைப்படுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு, பொது சமூகத்திலிருந்து மிதித்து தூக்கியெறியப்பட்டுள்ளனர். அதற்கு நாம் பல உதாரணங்களை கோடிட்டு காட்ட முடியும். பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது அதில் தலையாயதாகும். பாபரி மஸ்ஜித் மீள் நிர்மாணம் செய்ய வேண்டுமெனில் இந்தியா இழந்த மதச்சார்பற்ற கொள்கைகளை திரும்பப் பெற வேண்டும். இதுதான் நம்முடைய தலையாய கடமையாகும். என்ன விலை கொடுத்தும் நாம் அதனை செய்து முடிக்க வேண்டும்.
நம்முடைய ஜனநாயகம் இப்பொழுது நோய்வாய்ப்பட்டுள்ளது. நமது அரசியல் கட்சிகள்தான் இந்த அவல நிலையை ஏற்படுத்தியுள்ளன. பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பதவிகள் பணம் கொடுத்து வாங்கப்படுகின்றது. பொதுமக்கள் ஆதரவும், கருத்தும் பணம் கொடுத்து விலைக்கு வாங்கப்படுகின்றது. உயர் ஜாதியினர் சொல்வதுதான் ஜனநாயகம் என்றாகிவிட்டது.
நாம் நம்முடைய கொள்கை மற்றும் நாட்டு நலனிலிருந்து நீண்ட தூரம் விலகி வந்துவிட்டோம். மேலும், நமது நாடு இன்று தனி நபர்களின் கைகளிலும், வெளிநாட்டு சக்திகளிடமும் சிக்குண்டு கிடக்கின்றது. தலை முதல் கால் வரை நாடு ஊழலில் மூழ்கியுள்ளது. நாட்டின் இயற்கை மற்றும் வளங்களின் மீது அக்கறையற்றவர்கள் அதிகாரவர்க்கத்தில் உள்ளனர். கூடங்குளம் போன்ற மிகப்பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய அணு உலைகள் அமைக்க அனுமதிக்கப்பட்டு செயல்பாட்டிற்கும் வரவிருக்கின்றன. அரசு, அணுசக்திகள் நாம் விடும் மூச்சு என்றும் நம்மை நம்பவைக்கின்றன. அதிகாரவர்க்கம் நாம் குடிக்கும் நீர் எனவும், அமெரிக்காவும், இஸ்ரேலும் நாம் உண்ணும் என்றும் நம்மை ஏமாற்றுகின்றனர். மொத்தத்தில் நாம் மரணித்துக் கொண்டிருக்கின்றோம்.
ஆர்.எஸ்.எஸ். போன்ற பாசிஸ இயக்கங்கள் அன்னா ஹசாரே மற்றும் சில சாமியார்களை களத்தில் இறக்கி 1970 ல் ஜெயபிரகாஷ் நாராயணன் பயன்படுத்தியது போன்று பயன்படுத்த சதி செய்து வருகின்றனர். ஊழலுக்கு எதிரான போராட்டம் என நாட்டை ஏமாற்றி வருகின்றனர். அத்வானியும், நரேந்திர மோடியும் கைகளில் வாளுடன் சன்னியாசிகள் புடை சூழ, அவர்கள் செய்த குண்டு வெடிப்புகளுடன் ஊழலுக்கு எதிராகவும், அமைதிக்காகவும் போராடுவது போன்று செயல்பட்டு வருவதை நாம் மறந்து விடக்கூடாது.
ஆக சகோதர, சகோதரிகளே, வெண்கலத்தில் எழுத்துக்களைப் பொறிக்கும் கலைத்திறனைக் கொண்ட மொராதாபாத் மக்களே, பூட்டு தயாரிக்கும் அலிகர் மக்களே, தோல் செருப்புகளை தயாரிக்கும் ஆக்ரா மக்களே, சமையலறை கத்திகளை செய்யும் ராம்பூர் மக்களே, உங்கள் கலைகள், திறமைகள் ஆகியவற்றை வெளிக்கொணரும் தருணம் இது. தேவதார் மற்றும் பீவண்டியிலிருந்து வந்துள்ள நெசவாளர்களே நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது தேசத்தை “சமூக நீதி” எனும் நூலைக் கொண்டு நெய்வோம் வாருங்கள்.
அன்று ஒரு முகலாய மன்னர் சொன்னதாக சொல்லப்படுவதாவது, “டெல்லியின் கதவுகள் மிகவும் தொலைவில் உள்ளது. (தில்லி தூர் அஸ்த்) வாருங்கள்! என அழைத்தார்” இன்று பாப்புலர் ஃப்ரண்ட் அழைக்கின்றது, வாருங்கள்! டெல்லியின் கதவுகள் மிகவும் அருகில் உள்ளது” (தில்லி கரீப் அஸ்த்) ஜெய்ஹிந்த்.
செய்யது சர்வார் சிஷ்தி காத்தி நாஷீன் (காதிம், அஜ்மீர் ஷரீஃப்) அவர்கள் தனதுரையில் இஸ்லாமிய தீவிரவாதம் என்பது இல்லை. இஸ்லாமிய தீவிரவாதம் இல்லை என்பதற்கு ஆதாரம் முஸ்லிம்களை வதைத்த, வதைத்துக் கொண்டிருக்கின்ற நரேந்திர மோடி உயிருடன் தான் இருந்து கொண்டிருக்கின்றார்.
பாபரி மஸ்ஜிதை தகர்த்தவர்கள் உயிருடன் உலா வந்து கொண்டிருக்கின்றனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவிலில் ஆபரேஷன் ப்ளுஸ்டார் என்ற தாக்குதல் நடத்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அதற்கு பதிலடியாக சீக்கியர்களால் படுகொலை செய்யப்பட்டார். ஆனால், முஸ்லிம்கள் அனைத்து பாதிப்பிற்குப்பின்பும் அமைதிகாத்து வருகின்றனர்.
எப்பொழுதெல்லாம் தீவிரவாத தாக்குதல்கள் இந்தியாவில் நடைபெறுகின்றதோ அப்பொழுதெல்லாம் முஸ்லீம்கள் மீது குற்றம் சுமத்தப்படுவதும் முஸ்லிம்களும் நாங்கள் இல்லை என்ற பாணியில் தற்காப்பு முயற்சியில் இறங்கவும் செய்கின்றனர்.
நாம் அவ்வாறு செய்யத்தேவையில்லை, ஏனெனில் இந்நாட்டில் நடக்கும் அனைத்து பயங்கரவாதத் தாக்குதல்களிலும் பாதிக்கப்படுவதும் நாம் தான். குற்றம் சுமத்தப்படுவதும் நாம் தான் என்றார்.
நாங்கள் விரும்புவது சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியைத்தான். அதே சமயத்தில் முஸ்லிம்கள் பக்கம் உள்ள தவறையும் மறந்துவிடக்கூடாது.
நம்முடைய சமூகத்தில் பெரும்பாலõனவர்கள் கல்வியறிவற்றவர்களாக இருக்கின்றனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்.
கல்வி கற்க ஏழ்மையை காரணமாக சொல்லக்கூடாது. அரை ரொட்டியை சாப்பிட்டாவது நம்முடைய குழந்தைகளை நாம் படிக்க வைக்க வேண்டும்.
நாம் நமக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து முஸ்லிம் சமூகத்தை முன்னேற்றப்பாதையில் வழிநடத்திச் செல்ல வேண்டும் என்றார்.
அம்பேத்கர் சமாஜ் பார்ட்டியின் பிரசிடெண்ட் பாய் தேஜ்சிங் தனதுரையில்,
நாம் இடஒதுக்கீடு, பிரதிநிதித்துவம் போன்றவற்றை இன்றைய அரசுகளிடம் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். உண்மையில் நாம் (தலித்முஸ்லிம்கள்) ஒரணியில் இணைந்து நின்றால் நாம் அவர்களுக்கு கொடுக்கும் நிலையில் இருந்திருப்போம். இருந்திருக்க வேண்டும் என்றார்.
இந்த நாட்டை ஷைத்தானிய சக்திகள் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன. ஷைத்தானிய அணியினர் வளர்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் அரசியல் கட்சிகளை நடத்தவில்லை. அவர்கள் நாட்டை கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர்.
தலித்துகளும், முஸ்லிம்களும் இந்த மண்ணின் மைந்தர்கள் ஆவர். இறைவா! எங்களுடைய சகோதரர்களான முஸ்லிம்களை இந்த இந்துத்துவ பாசிஸ சக்திகளிடம் இருந்து பாதுகாப்பாயாக!
பிராமணர்கள் நாங்கள் வெஜிடேரியன்ஸ் மாமிசம் உண்ண மாட்டோம் என்று சொல்லிக் கொண்டு முஸ்லிம்களை கொன்று தின்று வருகின்றனர். தலித்துகளாகிய நாங்கள் இந்துக்கள் அல்ல! முஸ்லிம்களும் நாங்களும் சகோதரர்கள். நாம் இந்த தேசத்தில் நீதியை நிலைநிறுத்த வேண்டுமெனில் தலித்துகளும், முஸ்லிம்களும் இந்தியா முழுவதும் ஒரணியில் நின்று இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

மௌலானா யாஸீன் உஸ்மானி (வைஸ் பிரசிடெண்ட், ஆல் இந்தியா மில்லி கவுன்சில்) உரையாற்றும் போது, கண்ணியத்திற்குரிய இமாம் நிஜாமுத்தீன் அவர்கள் சொன்ன வரிகளை கோடிட்டுக் காட்டிய மரியாதைக்குரிய  அபூ சாஹிப் டில்லி அருகில் இருக்கின்றது (தில்லி கரீப் அஸ்த்) என்றார்கள். இங்கிருந்து நான் சொல்கின்றேன் (பார்லிமெண்ட் கரீப்  அஸ்த்) பார்லிமெண்ட் அருகில் இருக்கின்றது வாருங்கள்.
முஸ்லிம்களின் நிலைமாற வேண்டுமென்றால் நாம்  அதிகாரத்திற்கு வந்தே ஆகவேண்டும் என்றார்.
அதன் பிறகு உருது தினசரியான ராஷ்ட்ரிய சஹாராவின் ஆசிரியர் அஜிஸ் பர்னி இந்தியாவில் முஸ்லிம்களின் கவலைக்குரிய நிலை குறித்து உரையாற்றினார்.
பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு உறுப்பினரும், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தலைவருமான மௌலானா உஸ்மான் பெய்க் ரஷாதி அவர்கள் தனதுரையில்,
நாட்டில் நடந்த குண்டு  வெடிப்புகளுக்கு முஸ்லிம்கள் காரணமல்ல, ஆர்.எஸ்.எஸ்., சங்கபரிவார சக்திகள் தான் அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் காரணம் என்று கண்டுபிடித்த ஹேமந்த் கர்கரேவுக்கு எங்களின் வீரவணக்கம். சங்கபரிவாரம்தான் குண்டு வெடிப்புகளுக்கு காரணம் என்ற அவரின் கண்டுபிடிப்பால் பாசிஸ்டுகள் இன்று சிறையில் உள்ளனர். இன்னும் பலர் உள்ளே போக இருக்கின்றனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் இயக்கம் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பொதுவான இயக்கமாகும். நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், பாசிஸத்திற்கு எதிரானவர்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் இரவு பகல் பாராமல் உழைத்ததன் விளைவு இன்று டில்லி ராம்லீலா மைதானத்தில் வந்து நிற்கின்றோம்.
இந்திய அரசு அமைத்த பல கமிஷன்கள் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென பரிந்துரை செய்கின்றன. ஆனால், அரசோ முஸ்லிம்களுக்கு ஸ்காலர்ஷிப் கொடுத்து ஏமாற்ற முயற்சித்து வருகின்றது. இது நமக்கு வாழ்வா சாவா என்ற போராட்டமாகும். நாம்  தொடர்ந்து போராட வேண்டும். இந்த போராட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்டுடன் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் எப்போதும் அணிவகுத்து நிற்கும் என்றார்.
மஹந்த் ஆச்சார்ய சந்தியேந்திர தாஸ் மஹராஜ் (தலைமை நிர்வாகி, ராமஜென்ம பூமி கோவில், அயோத்தியா) அவர்கள் உரையாற்றும் போது,
நம் தேசத்தில் சமத்துவம், அமைதி நிலவும் வரை இது போன்ற கூட்டங்கள் நடைபெற வேண்டும். உங்களின் உரிமைகளை நீங்கள் கேட்டால் கிடைக்காது. அதனை போராடித்தான் பெற வேண்டும்.
இதேபோன்ற காரணங்களுக்காகத்தான் பாப்புலர் ஃப்ரண்ட் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கின்றது. பாப்புலர் ஃப்ரண்டின் இந்த முயற்சியை பாராட்டுகின்றேன்.
இந்த தேசத்தில் சிலர் நம்மை முஸ்லிம் என்றும் தலித் என்றும் பல்வேறு பிரிவுகளாகப் பிரித்து ஓட்டு வாங்கிக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால், அவர்கள் கொடுத்த வாக்குறுதி ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. அவர்கள் நம்முடைய நாட்டை கொள்ளையடித்து வருகின்றனர். நாமனைவரும் ஒன்றிணைந்து இதற்காக போராட வேண்டும் என்றார்.
டாக்டர். ஹஸீனா ஹாஸியா (பேராசிரியர். ஜாமியா மில்லியா இஸ்லாமியா).
அவர்கள் தனதுரையில் சச்சார் கமிட்டி அறிக்கை நம்முடைய கண்களை திறந்துள்ளது. ஆனால், அரசோ அமைதிகாத்து வருகின்றது. இதனை நாம் கருத்தில் கொண்டு போராட வேண்டும் என்றார்.
மௌலானா வலி ரஹ்மானி( செக்ரடரி ஆல் இந்தியா முஸ்லிம் பெர்சனல் லா போர்ட்)
அவர்கள் தனதுரையில் அதிகாரத்தில் உள்ளவர்கள் தேசத்திற்கும் நீதி செய்ய விரும்பவில்லை. மக்களுக்கும் நீதி செய்ய விரும்பவில்லை. எனவே நாம் நீதிக்காக போராடியே தீர வேண்டும் என்றார்.
முலாயம் சிங் யாதவ். எம்.பி. (தலைவர். சமாஜ்வாடி பார்ட்டி) அவர்கள் தனதுரையில்
தற்போது ஆட்சியிலிருப்பவர்களின் எண்ணம் சரியில்லை. திட்டங்களை வைத்துக்கொண்டு எண்ணங்கள் சரியில்லை என்றால் ஒரு பயனும் இல்லை.
அவர்கள் கமிட்டிகளை நியமித்தார்கள், அவற்றின் அறிக்கைகள் அவர்களின் முன்னால் உள்ளது.
ஆனால், அந்த கமிட்டியின் பரிந்துரைகளை செயல்படுத்த வெட்கப்படுகின்றார்கள். நாம் நீதியைப் பெற வேண்டுமானால் போராட்டத்தின் வழிமுறையை தேர்ந்தெடுக்க வேண்டும். முஸ்லிம்கள் ஒருங்கிணைந்து ஒரணியில் நின்று போராடினால் முஸ்லிம்களின் கோரிக்கையை  ஏற்பதைத்தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை என்றார்.
மேலும், அவர் கூறும்போது, பாரதிய ஜனதா கட்சி அதிகாரத்திற்கு வந்துவிடக்கூடாது என்கின்ற காலத்தின் கட்டாயத்தின் அடிப்படையில் தான் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவளித்து வருகின்றேன் என்றார்.
செய்யத் சஹாப்தீன் (EX. MP) பிரசிடெண்ட் ஆல் இந்தியா முஸ்லிம் மஜ்லிஸ்யே முஷாவரத்)
அவர்கள் தனதுரையில் முஸ்லிம்களுக்கு அவர்களின் விகிதாச்சாரத்திற்கேற்ப பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படும் வரை அவர்கள் முன்னேற முடியாது.
இந்தியாவில் தற்பொழுது நிலவில் இருக்கும் தேல்தல் நடைமுறையில் மொத்த மக்கள் தொகையில் 1520 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றவர்கள் அதிகாரத்தில் உள்ளனர். இவர்களுக்கு சாதாரண மக்களின் (காமன் மேனின்) கஷ்டங்களும், துன்பங்களும் தெரிவதில்லை.
இது மேட்டுக்குடி மக்களுக்கான அரசாங்கமாக சுருக்கப்பட்டு மேட்டுக்குடி மக்களால், மேட்டுக்குடி மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றது.
இந்நிலை மாற வேண்டுமெனில் விகிதாச்சார அடிப்படையிலான தேர்தல் மூலம் அந்தந்த சமூக மக்களின் விகிதாச்சாரத்திற்கேற்ப பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.
நாம் பல அரசியல் கட்சிகளுடன் இதுபற்றி பேசி முயற்சி செய்தும் எந்தப் பலனுமில்லை. நாங்கள் இப்போது பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் முஸ்லிம்களுக்கான இடஓதுக்கீட்டை வலியுறுத்தி வருகின்றோம் என்றார்.
மேலும், அவர் கூறும்போது முஸ்லிம்கள் வன்முறைக்கு எதிரானவர்கள் என்றும் நம்முடைய உரிமைகளுக்காக, நாம் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
நேஷனல் விமன்ஸ் ப்ரண்டின் தேசிய துணைத் தலைவர். ஏ.எஸ். ஜைனபா அவர்கள் தனதுரையில்
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெண்கள் யாருடைய பயமும் இன்றி தன்னந்தனியாக பயணிக்கும் காலம் வரும் வரை நாம் போராட வேண்டும்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக நீதியை நிலை நாட்ட எடுத்து வரும் சீரிய இந்த முயற்சியில் இஸ்மாயில் (அலை) அவர்களின் சந்ததிகளும், அன்னை ஹாஜிராவின் வழித்தோன்றல்களுமான நாங்கள் அனைத்தையும் தியாகம் செய்து சமூக நீதியை நிலை நாட்ட தயாராக இருக்கின்றோம் என்றார்.
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நேஷனல் பிரசிடெண்ட் அனீஸுஜ்ஜமான் தனதுரையில்,
இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள எவ்வித சுதந்திரத்தையும் நாம் அனுபவிக்க வில்லை.
பாப்புலர் ஃப்ரண்ட் அதற்காகத்தான் போராடி வருகிறது. கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அவர்களுடன் எப்போதும் துணை நிற்கும்.
பாப்புலர் ப்ரண்டின் சமூக நீதிக்கான இந்த முயற்சி நாட்டி மூலை முடுக்குகள் எங்கும் போய்ச்சேரும் வண்ணம் நாங்கள் உழைக்கத் தயாராக இருக்கின்றோம்.
பாசிஸ சக்திகளை ஆஸம்கரிலிருந்தும், பாட்லா ஹவுஸிலிருந்தும் வெளியேற்றுவோம் என சூளுரைத்தார்.
பாப்புலர் ஃப்ரண்டின் புதிய மைல்கல்லான இந்திய முஸ்லிம்களின் வரலாற்றின் வரிகளில் குறிப்பாக வட இந்திய முஸ்லிம்களின் நெஞ்சில் நம்பிக்கை தீபத்தை ஏற்றி வைத்த சமூக நீதி மாநாடு இராஜஸ்தான் மாநில பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் முஹம்மது ஷாபியின் நன்றியுரையுடன் நிறைவடைந்தது. மாநாட்டிற்கு வந்திருந்த இலட்சக்கணக்கான மக்கள் புதிய வரலாற்றைப் படைக்கும் உத்வேகத்துடன் இந்தியாவின் நாலாபுறங்களை நோக்கியும் பிரிந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *