Breaking News

தோஹா:கத்தர் நாட்டின் புதிய ஆட்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி, வளைகுடா நாடுகளிலேயே வயது குறைந்த ஆட்சியாளர் ஆவார்.அவருக்கு வயது 33

தோஹா:கத்தர் நாட்டின் புதிய ஆட்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி, வளைகுடா நாடுகளிலேயே வயது குறைந்த ஆட்சியாளர் ஆவார்.அவருக்கு வயது 33.மேற்கத்திய நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளுடன் நல்லுறவை பேணி வரும் தமீம், பிரிட்டீஷில் கல்வி பயின்றவர் ஆவார்.தேசிய ஒலிம்பிக் தலைவரும், ராணுவத்தின் துணை கமாண்டருமான தமீம், 2022-ஆம் ஆண்டு கத்தரில் நடைபெறவிருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் சுப்ரீம் கமிட்டியின் தலைவர் ஆவார்.
ஆட்சி அதிகாரம், தமீமிடம் ஒப்படைக்கப்பட்டாலும் கத்தரின் கொள்கைகள் மாறாது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இன்று வளைகுடா நாடுகளில் அதிவேகமாக முன்னேறி வரும் கத்தரின் முந்தைய ஆட்சியாளர் ஷேக் ஹமத் பின் அல் தானி அந்நாட்டின் வளர்ச்சிக்கு கடிவாளம் பிடித்தவர் ஆவார்.அரபு நாடுகளின் எல்லா பிரச்சனைகளிலும் முக்கிய பங்காற்றி வரும் நாடு கத்தர்.
அரபு புரட்சிக்கு பிறகு எகிப்து, லிபியாவுக்கு உதவிகள் அளித்தது, இஸ்ரேலின் தாக்குதலில் தகர்ந்த ஃபலஸ்தீனுக்கு ஆதரவு கரம் நீட்டியது, சிரியாவில் சர்வாதிகாரி பஸ்ஸாருல் ஆஸாதிற்கு போராடுபவர்களுக்கு ஆதரவு அளித்தது, ஆப்கான் சமாதான பேச்சுவார்த்தைக்கு இடம் அளித்தது உள்ளிட்ட சிறப்புக்கள் ஷேக் ஹமதிற்கு உண்டு.
அல் ஜஸீரா தொலைக்காட்சியை நிறுவியது, புகழ்பெற்ற லண்டன் ஹரோட்ஸ் ஆடம்பர சந்தையை வாங்கியது போன்ற நடவடிக்கைகள் அந்நாட்டின் செல்வ வளத்தை காட்டுகின்றன.
செய்தி:தேஜஸ்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *