Breaking News

தேசிய அரசியல் மாநாடு பிப்ரவரி 13,14,15 கோழிக்கோடு

20120806161240இந்தியாவில் மட்டிக்கிடந்த ஃபாசிஸம் எனும் இருள் கிழித்து புதிய இந்தியாவை உருவாக்க கேரளத்தில் தோன்றிய நவீன் சமூக இயக்கம் Neo -& Social Movement இன்று துணைக்கண்டத்தின் பெரும்பாலான மாநிலங்களில் காலூன்றியிருக்கிறது. அந்த நவீன சமூக இயக்கம் தேர்ந்தெடுத்த தியாக பாதையைப் பற்றிப் பிடித்து மாற்றத்தை நோக்கி மக்கள் ஒன்றிணைந்து விரைகிறார்கள் என்பதைத்தான் இந்த தேசிய அரசியல் மாநாட்டின் எழுச்சி அறிவிக்கிறது.
வலிமையான இந்தியாவை உருவாக்க கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் நாம் பெங்களூரில் எடுத்துக் கொண்ட திடசங்கல்பத்தின் வெற்றி அபாரமானது என்பதை கோழிக்கோடு மகாசமுத்திரத்துக்கு இணையான மக்கள் சமுத்திரம் இன்று அறிவிக்கிறது.
கொடியேற்று விழாவுடன் துவங்கிய தேசிய அரசியல் மாநாடு
கோழிக்கோடு கடற்கரை, ஷஹீத் குஞ்ஞாலி மரைக்கார் நகரில் 13.06.2009 காலை 8.30 மணிக்கு கொடியேற்று விழõவுடன் தேசிய அரசியல் மாநாட்டின் நிகழ்ச்சிகள் பெரும் ஆரவாரங்களுடன் துவங்கியது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் மௌலானா உஸ்மான் பெய்க் ரஷாதி அவர்கள் மாநாடு வெற்றி பெற இறைவனிடம் பிரார்த்தனை செய்தார். பிறகு பாப்புலர் ஃப்ரண்டின் சேர்மன் இ.எம். அப்துர் ரஹ்மான் அவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நட்சத்திரம் பொறிக்கப்பட்ட மூவர்ணக்கொடியை அரபிக் கடல் சாட்சியாக ஏற்றி மாநாட்டு நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃபரண்ட் பொதுச் செயலாளர் கே.எம். ஷரீஃப், துணைத்தலைவர் ஏ.சயீது, ஏ.சயீது, மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் ஓ.எம்.ஏ. ஸலாம், முன்னாள் சேர்மன் இ.அபூபக்கர், தேசிய பொருளாளர் தெஹ்லான் பாகவி, கேரள தலைவர் வி.பி. நஸ்ருத்தீன், கேரள பொதுச் செயலாளர் அப்துல் மஜீத் பைஸி, தமிழக தலைவர் முஹம்மது அலி ஜின்னா, தமிழக பொதுச் செயலாளர் அஹ்மது ஃபக்ருதீன், கர்நாடக தலைவர் அப்துல் லத்தீஃப், கர்நாடக பொதுச் செயலாளர் அஃப்ஸர் பாஷா, தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பேரா.பி. கோயா, வழக்கறிஞர் கே.பி. முஹம்மது ரீ ஷரீஃப், டாக்டர் மஹ்பூப் ஆவாத் ஷரீஃப், யாசிர் ஹஸன், அனீஸ் அஹ்மத், முஹைதீன் குட்டி பைஸி, பஷீர் அஹ்மத் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகம், கேரளா, கர்நாடகா மாநில பாப்புலர் ஃப்ரண்ட் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
கொடியேற்று விழாவுடன் மாநாட்டின் பரபரப்பு ஆரம்பமாகியது.
மாநாட்டு திடலில் ஏற்றி வைக்கப் பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நட்சத்திரம் பொறிக்கப்பட்ட மூவர்ணக்கொடி நம்பிக்கை மற்றும் மாற்றத்தின் வசந்தத்தை அறிவிப்பதாக பரபரப்புடன் பட்டொளி வீசிப் பறந்தது. அந்தப் பரபரப்பு கொஞ்சமும் குறையாமல் தேசிய அரசியல் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் பார்த்துக் கொண்டனர்.
ஆம், மூன்று நாளும் தேசிய மறுமலர்ச்சிக்கு வித்திடக் கூடிய கருத்தரங்குகள், விவாதங்கள், அரசியல் விழிப்புணர்வு ஆய்வுகள், மனித உரிமை பாதுகாவலர்கள் சந்திப்பு, பெண்கள் மாநாடு, மாணவர் மாநாடு, உலமாக்கள் மாநாடு… என கோழிக்கோடு நகரம் மாற்றத்தை நோக்கிய பரபரப்பில் இயங்கியது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து அறிஞர்களும் அனைத்து சமுதாயத் தலைவர்களும் இந்நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தனர்.
நவீன சுதந்திரப் போரி இரண்டாவது எழுச்சி!
அணிவகுப்பு மற்றும் பேரணியை தொடர்ந்து இரவு 7 மணிக்கு மகாகவி அல்லாமா இக்பால் (ரஹ்) அவர்கள் இயற்றிய ஒற்றுமை கீதமான ‘ஸாரே ஜஹான் ஸே அச்சா’ பாடலுடன் மாபெரும் மா நாடு துவங்கியது. பாப்புலர் ஃப்ரண்ட் பொதுச் செயலாளர் கே.எம் ஷரீஃப் வரவேற்புரை நிகழ்த்த தென் ஆஃப்ரிக்கா ஜனாதிபதியின் தனிச் செயலர் இப்றாஹீம் ரசூல் மாநாட்டை துவக்கி வைத்தார்.
தேசிய தலைவர் உரை
இதனைத் தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் சேர்மன் இ.எம். அப்துர் ரஹ்மான் தலைமையுரையாற்றினார். அவர் தனது உரையில், “நவீன சமூக இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா விடுதலை அழைப்பை ஏற்று தேசிய அரசியல் மாநாட்டிற்கு உற்சாகமும் எதிர்பார்ப்பும் அலைவீசும் இந்த நிறைவு நாள் நிகழ்ச்சியில் ஒன்று சேர்ந்திருக்கும் உங்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன்.
இந்தியாவில் முதல் முறையாக மேற்குலக ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பும் அதற்கெதிரான தீரமிக்க போராட்டங்களும் நடந்த மலபாரின் கரையினில் பாப்புலர் ஃப்ரண்டின் அழைப்பை ஏற்று நீங்கள் இன்னுமொரு மனிதக் கடலை உருவாக்கியிருக்கிறீர்கள்.
1498 மே 21ல் காலனியாதிக்கம் மற்றும் அந்நிய ஆட்சியின் துவக்கமாக வாஸ்கோடகாமாவின் பாய்மரக்கப்பல் நங்கூரமிட்டது இங்குதான்!
அன்றைய மலபார் அரசன் சாமுத்திரி போர்த்துகீசியர்கள் வீசியெறிந்த அற்ப சலுகைகளுக்காக போர்த்துகீசிய படையிடம் சமாதானம் செய்து கொண்ட போதும், நிலைகுலையாமல் போராடி ஷஹீதான கடற்படை நாயகன் ஷஹீத் குஞ்ஞாலி மரைக்காயரின் பெயரைத்தான் இம்மாநாட்டு திடலுக்கு சூட்டியுள்ளோம்.
ஜாதிய வலையில் சிக்கி தவித்த அன்றைய இந்தியாவிற்கு ஏகத்துவம், மானுட சமத்துவக் கொள்கை மற்றும் சமூக நீதி ஆகியவற்றின் புனிதச் செய்தியுடன் இஸ்லாம் நுழைந்ததும் இந்தக் கடற்கரை வழியாகத்தான்!
ஆங்கிலேய எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் இன்றும் ஜொலித்துக் கொண்டிருக்கும் ஒரு நூற்றாண்டிற்கும் மேல் நீடித்து நின்ற மலபார் போராட்டத்தின் தீரமிக்க போராளிகளையும் நூற்றுக் கணக்கான ஷுஹதாக்களையும் இவ்வேளையில் நாம் நினைவு கூறுவோம்.
வரலாற்றிலும் நிகழ்காலத்திலும் இடம் பெற்ற சுதந்திரப் போராளிகள் மற்றும் வீர ஷஹீதுகளின் நினைவுகள், இருள் பரப்பும் மனித குலத்தின் எதிரிகளுக்கு எதிரான நமது போராட்ட வழிகளில் வெளிச்சம் வீசட்டும் என்று நாம் துஆச் செய்வோம்.
நமது முன்னோர்கள் குழி தோண்டிப் புதைப்பதற்காகப் போராடிய ஜாதி வேற்றுமைகளும், சமூக அழிவுகளும், அரசியல் அடிமைத்தனங்களும் பின் வாங்காமல் இன்றும் வேடமணிந்து நிலைத்து நிற்கின்றன. அனைத்து இந்தியர்களுக்கும் சம உரிமை கிடைப்பதற்கு புதியயோர் இந்தியாவை கட்டியெழுப்ப உறுதியெடுத்துக் கொண்ட பயணக் குழுதான் இது.
நயா காரவான், நயா ஹிந்துஸ் தான். (புதிய பாதை, புதிய இந்தியா)
சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னதாக 2007 பிப்ரவரி 15, 16, 17 தேதிகளில் பெங்களூரில் ஷஹீத் திப்பு சுல்தான் நகரில் நடந்த வலிமையான இந்தியாவை உருவாக்க நடந்த மாநாட்டில் Empower India Conference நாம் பாப்புலர் ஃப்ரண்டை மக்கள் மத்தியில் சமர்ப்பித்தோம்.
கேரளாவில் நேஷனல் டெவலப்மென்ட் ஃப்ரண்ட் (என்.டி.எஃப்), தமிழநாட்டில் மனித நீதிப் பாசறை (எம்.என்.பி) கர்நாடகாவில் கர்நாடகா ஃபோரம் ஃபார் டிக்னிடி (கே.எஃப்.டி) என்ற மூன்று இயக்கங்களும் ஒன்று சேர்ந்து ஒரே குடையின் கீழ் பாப்புலர் ஃப்ரண்ட் உருவானது.
இந்நாட்டில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் முழுமையாக வலிமையடைவதற்கான பாதையில் நாம் நம்மையே அர்ப்பணித்துக் கொண்டோம்.
மலைவாழ் மக்களான ஆதிவாசிகளும், மண்ணின் மைந்தர்களான தலித்களும், இருண்டு கிடந்த கடந்த காலங்களிலிருந்து புது உலகை நோக்கி நாட்டைக் கொண்டு சென்றவர்களின் தலைமுறையினரான முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினரும், பாப்புலர் ஃப்ரண்ட் சுட்டிக் காட்டிய சுதநதிரம், நீதி , பாதுகாப்பு என்ற லட்சியங்களுடன் இணைய முன் வந்தனர். அடுத்த இரண்டு வருடங்களின் செயல்பாட்டின் பாதையில் இரண்டு சாதனைகளை படைத்தோம். முதலாவதாக மாநில இயக்கங்களுக்கிடையிலான பிரிவினைக் கோடுகள் இனி தேவையற்றது என்ற நிலையும், நெருக்கமும், ஒற்றுமை மனப்பான்மையும் உருவானது.
இரண்டாவதாக, இயக்கத்தின் செய்தியும் செயல்முறையும் மூன்று மாநிலங்களின் எல்லைகளைத்தாண்டி நாட்டின் வடக்குக்கும், கிழக்குக்கும், மேற்குக்கும் உள்ள மாநிலங்களில் கூட வரவேற்கப்பட்டது. ஒரு மாதத்திற்கு முன்பு 2009 ஜனவரி 8,9,10 தேதிகளில் நடந்த பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பொதுக்குழு கூட்டத்தில், கூட்டமைப்பு (Federation) என்ற நிலையைக் கைவிட்டு ஒரே இயக்கமாக ஒருங்கிணைய என்.டி.எஃப்.ம், எம்.என்.பி.யும், கே.எஃப்.டி.யும் தீர்மானித்தது இயற்கையானதும் இன்றியமையாததுமாக இருந்தது.
வலிமையான இந்தியாவை உருவாக்க நடந்த மாநாட்டின் பிரச்சார வேலைகளும் பிரதிநிதித்துவமும் தென் மாநிலங்களில் மட்டும் குறுகி நின்றது. ஆனால் தற்போது தேசிய அரசியல் மாநாட்டை பிரச்சாரம் செய்வதற்கு வெகு தொலைவிலுள்ள பல மாநிலங்களிலிருந்தும் கூட மாநில அமைப்புகள் முன் வந்தன. 3 நாட்கள் தங்களுடன் இந்த மாபெரும் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள கேரளாவும், தமிழ்நாடும், கர்நாடகாவும் மட்டுமின்றி 13 மாநிலங்களிலிருந்தும் பிரதிநிதிக்குழுக்கள் வந்து சேர்ந்துள்ளன என்ற உண்மையை திருப்தியோடு இங்கு நினைவுகூர்கிறேன்.
தேசிய அரசியல் மாநாடு இங்கு நிறைவடையும் போது என்.டி.எஃப், எம்.என்.பி., கே.எஃப்.டி. என்ற பெயர்களில் மூன்று மாநிலங்களில் நீண்ட காலம் நீடித்து நின்றிருந்த இயக்கங்கள் வர லாற்றின் பாகமாகின்றன. உண்மையில் நாம் புதிய வரலாற்றை படைப்பதில் பங்காளிகளாகின்றோம். நாம் கடந்து வந்த பாதையில் நம்மை முந்திச் சென்று உயிர்த் தியாகம் என்ற இலட்சியத்தை பூர்த்தி செய்து, ஷஹாதத்தின் மூலமாக மரணத்தை வென்று, இன்றும் இறைவனுடன் சேர்ந்திருக்கும் எல்லா சகோதரர்களும் இந்த வர லாற்றுசம்பவத்தில் நம்முடைய மனதில் நிறைந்திருக்கிறார்கள். அவர்களுடைய புனிதமான ஷஹாதத் நம்முடைய மனதில் தீயாக கனன்று கொண்டிருக்கட்டும்!
இருபது ஆண்டு காலமாக இந்தியாவில் இனவெறி பிடித்த ஃபாசிஸம் மற்றும் நிர்மூலாமாக்கும் அரசியலின் தேர்ச் சக்கரங்களுக்கும் திரிசூல முனைகளுக்கும் மக்கள் இரைகளாக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, கோழிக்கோட்டில் முளைத்த ஆக்கப்பூர்வமான எதிர்ப்பின் சிறு செடி தான் இப்போது வளர்ச்சியின் புதியதொரு கட்டத்தை அடைந்திருக்கிறது.
விரல்விட்டு எண்ணக்கூடிய சில நபர்களை வைத்து கோழிக்கோட்டில் ஆரம்பிக்கப்பட்ட சமூக முன்னேற்ற இயக்கம் ஒரு சுழற்சியை பூர்த்தி செய்து, ஒரு மாபெரும் மாநாட்டோடு மீண்டும் இங்கேயே திரும்பி வந்திருக்கிறது. எட்டுத் திக்குகளையும் நோக்கி அதனுடைய புதிய பயண அறிவிப்புகள் இங்கிருந்தே நடப்பது வரலாற்றுக் கடமையாகும். நம்மை பூரிப்படையச் செய்யும் ஒரு அறிவிப்புக்கு இன்று நாம் சாட்சியாகப் போகிறோம்.
கேரளாவின் என்.டி.எஃப், தமிழ்நாட்டின் எம்.என்.பி., கர்நாடகாவின் கே.எஃப்.டி., ஆகிய மூன்று இயக்கங்களுடன் கோவாவின் ‘சிட்டி சன்ஸ் ஃபோரம்’, ஆந்திரப் பிரதேசத்தின் ‘அசோசியேஷன் ஃபார் சோஷியல் ஐஸ்டிஸ்’, ராஜஸ்தானின் ‘கம்யூனிட்டி ஃபார் சோஷியல் அன்டு எஜுகேஷனல் ஃபோரம்’ மேற்கு வங்காளத்தின் ‘நாகரிக் அதிகார் சுரக்ஷா சமிதி’, மணிப்பூரின் ‘லிலாங் சோஷியல் ஃபோரம் ’ ஆகிய ஐந்து இயக்கங்களும் பாப்புலர் ஃப்ரண்டில் சேர்ந்து ஐக்கியமாகி இன்றிணைகிறது. இந்த நவீன சமூக முன்னேற்றத்திற்கு வலு சேர்த்து, அதன் முதுகெலும்பாக பிணைந்து இணைய முடிவு செய்து அவற்றின் பிரதிநிதிகள், இங்கே வருகை தந்துள்ளனர் உருதுவும், ஹிந்தியும், தெலுங்கும், பெங்காளியும் மணிப்பூரியும் பேசும் சகோதரர்களே இந்த மனிதக் கடல் உங்களை வாழ்த்துகிறது.
அன்பிற்கினியவர்களே! இந்த ஐக்கியம் நமக்கு ஓய்வெடுப்பதற்கான அறிகுறியை தெரிவிக்கவில்லை. எங்காவது எள்ளளவேனும் சோம்பலிருந்தால் அதனை ஓட்டி விரட்டிடுவதற்கான முன்னறிவிப்புதான் இது! பல மடங்கு ஆத்ம அர்ப்பணிப்பிற்கும், உழைப்பிற்குமான அழைப்பாகும் இது!
‘அதிகாரம் மக்களுக்கே’ என்ற தேசிய அரசியல் மாநாட்டின் பிரகடனம் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது மிகத்தெளிவாகின்றது. சிலர் சந்தேகத்தோடும்,  வேறு சிலர் கவலையுடனும் இதனைக் காண்கிறார்கள் என்று கூறுவதைக் கேட்டோம். ஆனால் இந்தியாவின் பல பாகங்களையும், தென்னிந்தியாவின் பல பாகங்களையும், தென்னிந்தியாவில் பெரும்பான்மை நகரங்களையும், கிராமப் புறங்களையும் தட்டியெழுப்பிய மாநாட்டு பிரச்சாரங்கள் வழியாக, மக்களின் மனதை படித்தறிய எங்களின் உறுப்பினர்களால் இயன்றிருக்கிறது. மக்களுக்கு சந்தேகமில்லை. கவலையில்லை. மக்களுக்கு பிரித்தறியும் சக்தி உருவாகியிருக்கிறது. அரசியல் உணர்வு பிறந்துள்ளது. இந்தியாவில் இன்றுவரை, அரசியல் சுரண்டல்களின் பலிகடாக்களாக்கி அனைத்து அரசியல் கட்சிகளாலும் வஞ்சிக்கப்பட்டு வந்த மக்கள் சிறிதும் சந்தேகமின்றி அறைகூவல் விடுக்கின்றனர், “எங்களின் விதியை, இனி நாங்களே முடிவு செய்வோம்” என்று!
‘பி.ஜே.பி. வருகிறது’ என்று பயமுறுத்தி எங்கள் வாக்குகளை கவர்ந்து மதச்சார்பின்மை மற்றும் சிறுபான்மையினர் பாதுகாவலர்கள் என்று வேடமணிந்து வஞ்சனையைத் தொடர இனி எந்தவொரு அரசியல் கட்சியையும் வரப்போகும் தேர்தல்களில் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
உண்மையான மக்களாட்சியின் தத்துவத்தை செயல்படுத்துவதுதான் எங்கள் இலட்சியம். உறுதியான அரசியல் சாசனம் இருந்தும், தவறாமல் தேர்தல்கள் திரும்பத் திரும்ப வந்தும், வளர்ச்சியடைய விடாமல், முன்னேற விடாமல் மக்களை அடிமைகளாக்கி வைத்திருக்கின்றனர். அதிகாரம் மக்களிலிருந்து வெகு தொலைவிலிருக்கிறது. அணு சக்தி என்று பெருமிதம் கொள்ளும்போதும், வறுமையிலும், எழுத்தறிவின்மையிலும் நாடு முதலிடத்தில்தான் நிற்கிறது.
இங்கு நடக்கும் முன்னேற்றம், உள்நாட்டு வெளிநாட்டு தரகு முதலாளிகளுடையதுதான்! அரசியல் தலைவர்களும், அதிகார வர்க்கத்தினரும், உயர் ஜாதி வர்க்கத்தினர்களும், பின்னிப்பிணைந்த ஆளும் வர்க்கத்தினர் மட்டுமே இன்றைய அரசியலின் பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆதிவாசிகளும், கிராம வாசிகளும், தலித்களும், முஸ்லிம்களும், விவசாயிகளும், தொழிலாளிகளும், அடங்கிய சமூகத்தின் பெரும்பான்மையினர்தான் இரையாக்கப்பட்டுள்ளனர். அதிகாரத்தில் உரிய பங்கு அவர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கின்றது.
சட்டம் இயற்றும் சபைகள், நிர்வாக அமைப்பு, நீதி பரிபாலன முறை என்ற மக்களாட்சியின் மூன்று செயல்முறை தளங்களிலும் அவர்களுடைய பிரதிநிதித்துவம் பெயரளவில் மட்டுமே உள்ளது. சமூகங்கள் என்ற நிலையில், இந்தியாவில் அரசியல் பாகுபாடுகளுக்கும், அரசியல் சுரண்டல்களுக்கும் இரையாகிடுபவர்களில், முன்னணியிலிருப்பவர்கள் தலித்களும் முஸ்லிம்களும்தான்!
ஜாதி, மத காழ்ப்புணர்ச்சியை சிந்தனைக் கொத்தாக எற்றுக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்.க்கும் அதனுடன் தொடர்புடைய இந்துத்துவ இயக்கங்களுக்கும், தலித்களையும் முஸ்லிம்களையும் அழித்தொழிக்க முடியாது என்று தெரியும், அதனால் அவர்களை பயமுறுத்தி அடிபணிய வைக்கவும், அடிமைவர்க்கமாக நிலை நிறுத்தவுமே முயற்சி செய்கிறார்கள்.
ஒரே பரம்பரையினரான தலித்களையும், முஸ்லிம்களையும் பிரித்து அவர்களுக்கிடையே சண்டையை மூட்டுவது இந்துத்துவ அரசியலின் நாசப்படுத்தும் தந்திரமாகும். துரதிஷ்டவசமாக நமது ஆட்சியமைப்பும், அதனை நிர்வகிக்கும் அரசியல் கட்சிகளும், ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கெதிரான ஃபாசிஸ அஜெண்டாவை வெற்றி பெறச் செய்கிறார்கள்.
வட இந்தியாவின் தலித் காலனிகளுக்கும், முஸ்லிம் கிராமங்களுக்கும் தண்ணீர் வசதி, சாலை வசதி, போக்குவரத்து வசதி ஆகியவை எட்டாக்கனிகளாகும்.
இந்த விஷயத்தில் பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களுடன் காங்கிரஸ் ஆட்சியிலுள்ள மாநிலங்களும், ஒரு சேர நிற்கிறது. 30 வருடங்களாக சி.பி.எம்.முக்கு அதிகார குத்தகை கிடைத்த மேற்கு வங்காளத்திலிருந்தும் கிடைத்துக் கொண்டிருப்பது நல்ல செய்திகளல்ல.
காவல்துறையிலும், இதர விசாரணை ஏஜென்ஸிகளிலும், உளவுத் துறையிலும் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகும். முஸ்லிம்களுக்கெதிரான கலவரங்களில் பங்கெடுத்தும் முஸ்லிம் பயங்கரவாதத்தைப்பற்றி பீதி பரப்பியும், கல்வித் திறமையுள்ள முஸ்லிம் இளைஞர்களைப் பொய் வழக்கு சுமத்தி சிறையிலடைத்தும் போலி என்கவுண்டரில் படுகொலை செய்தும் மத்தியிலும் மாநிலங்களிலும் செயல்பட்டு வரும் போலீஸ் விசாரணைப் பிரிவுகள் இந்துத்துவ அஜெண்டாவிற்கு அடிபணிந்து செயல்படுவதாகவே தெரிகிறது. இதன் மூலம் இவர்கள் தங்களின் நம்பகத் தன்மையை இழந்து நிற்கிறார்கள்.
போதுமான பிரதிநிதித்துவம், சட்டத்தின் முன் சமத்துவம், வளங்களைப் பகிர்ந்தளிப்பதிலும் மேம்பாட்டிலும் சரியõன பங்கு இவையெல்லாம் சேர்ந்ததுதான் பெருமித உணர்வுள்ள குடிமக்களாக வாழ முடிகின்ற நிலைமையாகும். இது நன்கொடையாகக் கிடைப்பதோ யாராவது கையில் கொண்டுவந்து தருவார்கள் என்று எதிர் பார்க்கக்கூடியதோ அல்ல. மாறாக இது அபகரிக்கப்பட்ட உரிமை என்று தானாகப் பிரித்தறிந்து துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள், தொடர்ச்சியான போராட்டங்களின் மூலம் அடைய வேண்டியதாகும்.
முஸ்லீம்கள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் அதேபோன்று இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோரின் உரிமைப் போராட்ட வழியில் அலைகடல் போன்ற இந்த மனித மகா சங்கமத்தின் வாயிலாக எதிர் சக்திகளால் பிடுங்கியெறிய முடியாத ஒரு மைல்கல்லை நாம் ஊன்றி நிறுவுகின்றோம். இது வரலாறு! புதியதோர் வழியில் பயணிப்பதன் தொடக்கமாகும். நம்மைப்பற்றி மக்களிடையே சந்தேகங்களை உருவாக்கவும் பீதியடையச் செய்யவும் கச்சை கட்டிக் கொண்டு செயல்படும் மையங்கள் உண்டு.
பாப்புலர் ஃப்ரண்ட் அரசியல் கட்சியாகுமா?
பாப்புலர் ஃப்ரண்ட்டின் அரசியல் கட்சிப் பிரிவு வருமா? ஆகிய கேள்விகள் எழுந்ததுண்டு. எல்லாக் கேள்விகளும் நிச்சயம் முடிவுக்கு வரும். எல்லா சந்தேகங்களுக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்படும். ஒன்று மட்டும் உண்மை. பாப்புலர் ஃப்ரண்டின் தோளில் புதிய பொறுப்புகள் வந்து சேருகின்றன. முஸ்லிம்களும் மற்ற ஒடுக்கப்பட்ட சமுதாயங்களும் தங்களின் அரசியல் பங்கை தாங்களே நிர்ணயிக்க வேண்டும் என்ற செய்தி வியாபித்துவிட்டது. ஆழமாகவும், விசாலமாகவும் பல கட்சிகளின் சதுரங்கப் பலகையில் காய்களாக விளையாட்டுக்கு நின்று கொடுக்க அவர்கள் இனியும் தயார் இல்லை.
ஒடுக்கப்பட்ட மக்களுடைய சுய தைரியத்தின் சின்னமாக, புதியதோர் தேசிய அரசியல் இயக்கம் உயர்ந்து வரவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். காலத்துடன் சேர்ந்து சமூகத்தின் முன்வரிசையில் நின்று வழிகாட்டியாக நிலை கொள்வதுதான் ஒரு புதிய சமூக இயக்கத்தின் வரலாற்றுக் கடமையாகும.
எதிர்மறை அரசியலை திரும்பத் திரும்ப செய்வதனால் உருவாகும் சலிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்து இந்தியாவில் நலிவடைந்த பிரிவினராகிய பெரும்பான்மையினரை அதிகாரத்திற்கு கொண்டு செல்வதற்கான வரலாற்றுக் கடமையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னெடுத்துச் செல்லும் என்று இறைவன் மீது தவக்குல் வைத்தும் மக்கள் மீது நம்பிக்கை வைத்தும் பிரகடனப்படுத்துகிறேன்.
வரலாறு என்பது உறங்கிக் கிடப்பதற்கு அல்ல; மாறா மீண்டும் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டியதாகும்.
சகோதரர்களே! செயல் வீரர்களே! நவீன வாஸ்கோடகாமாக்களின் திருட்டுச் சரக்குக் கப்பல்களை உடைத்தெறிவோம்! குஞ்ஞாலிமார்களின் போர்க்கப்பலில் நாம் முன்னேறுவோம்! தோளோடு தோள் சேர்ந்து நாம் லட்சியத்தை அடைவோம்! நயா காரவான்! நயா ஹிந்துஸ் தான்!!
பாப்புலர் ஃப்ரண்ட் தமிழ்நாடு மாநில தலைவர் ஆற்றிய உரை
இதே கேரளத்தின் கடற்புறம் வழியாக சுமார் 1300 வருடங்களக்கு முன்பு வந்த இஸ்லாமியப் புரட்சிதான் நமக்கும், இந்த தேசத்தின் அநேக குடிமக்களுக்கும் சுவாசம் தந்தது; சுதந்திரம் தந்தது.
அதேபோல இன்று இந்தக் கடற்கரையில் மையம் கொண்டிருக்கும் முஸ்லிம்கள், தலித் சமூக மக்கள் மற்றும் சிறுபான்மை மக்களின் எழுச்சி இந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் எழுச்சி புதிய பாதையில் புதிய இந்தியாவைப் படைக்கும் இன்ஷா அல்லாஹ்.
நாம் படைக்க விருக்கும் புதிய இந்தியாவில் அனைவருக்கும் சுதந்திரம், நீதி, பாதுகாப்பு நிச்சயம் கிடைக்கும்.
சுதந்திரமடைந்து 60 ஆண்டு களுக்கும் மேலாக வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகமே, தலித் சமூக மக்களே இனிமேலும் இந்த ஆட்சியாளர்களிடத்தில், “எனக்கு சலுகை தா; சலுகை தா! ” என்று யாசகம் கேட்பதை விட்டு விட்டு சொந்தக்காலில் நின்று “இது எங்கள் உரிமை! அரசியலமைப்புச் சட்டம் தந்த உரிமை” என்று முழங்கி நீங்கள் போராட முன்வர வேண்டும்.
இந்தப் போராட்டத்திற்கு வடிவம் கொடுக்க, உயிர் கொடுக்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தயாரõக உள்ளது.
இந்த தேசத்திற்கு ஆபத்தாக திகழும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளே! உங்களுக்கு நாங்கள் விடும் அறைகூவல்! ஓ அர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளே! உங்கள் கயமைத் திட்டமான ஹிந்து ராஷ்டிரா, இந்த தேசத்தின் இறையாண்மைக்கு எதிரானது; தேசத்தின் மதச் சார்பின்மைக்கும், அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரானது. எனவே உங்களுடைய ஹிந்து ராஷ்டிரா எனும் கிரிமினல் அஜெண்டாவை தகர்க்கும் கூட்டம்தான் இது என பிரகடனப்படுத்துகின்றோம். (இன்ஷா அல்லாஹ்)
இந்தக் கூட்டத்தின் வளர்ச்சி ஹிந்து ராஷ்டிராவிற்கு சாவு மணி அடிக்கும் என்பதை நாம் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதிகாரம் இல்லையென்றால் அடிமைத்தனம் தான் எனவே இது நாள் வரை கடைப்பிடித்து வந்த எதிர்மறை அரசியலுக்கு விடை கொடுத்து நேர் மறை அரசியலைக் கையிலெடுத்து நாம் அதிகாரத்திற்கு வர வேண்டும்.
எட்டு மாநில இயக்கங்கள் பாப்புலர் ஃப்ரண்டில் இணைந்தன

சேர்மன் உரைக்குப் பிறகு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவில் 8 இயக்கங்கள் ஒன்றிணைவதாக (Merger Declaration) பிரகடனப்படுத்தப்பட்டது.
கேரளாவின் என்.டி.எஃப், தமிழ்நாட்டின் எம்.என்.பி., கர்நாடகாவின் கே.எஃப்.டி., ஆகிய மூன்று இயக்கங்களுடன் கோவாவின் ‘சிட்டி சன்ஸ் ஃபோரம்’, ஆந்திரப் பிரதேசத்தின் ‘அசோசியேஷன் ஃபார் சோஷியல் ஜஸ்டிஸ்’, ராஜஸ்தானின் ‘கம்யூனிட்டி ஃபார் சோஷியல் அன்டு எஜுகேஷனல் ஃபோரம்’ மேற்கு வங்காளத்தின் ‘நாகரிக் அதிகார் சுரக்ஷா சமிதி’, மணிப்பூரின் ‘லிலாங் சோஷியல் ஃபோரம்’ ஆகிய ஐந்து இயக்கங்களும் பாப்புலர் ஃப்ரண்டில் சேர்ந்து ஐக்கியமாகி ஒன்றிணைந்தன. இந்த நவீன சமூக முன்னேற்றத்திற்கு வலு சேர்த்து, அதன் முதுகெலும்பாக பிணைந்து இணைய முடிவு செய்து அவற்றின் பிரதிநிதிகள், தோளோடு தோள் சேர்ந்து கைகோர்த்து நின்றனர்.
மாநாட்டின் மற்றொரு முக்கிய நிகழ்வாக பாப்புலர் ஃப்ரண்ட் முன்னாள் சேர்மனும், தற்போதைய தேசிய செயற்குழு உறுப்பினருமான இ. அபூபக்கர் மாநாட்டின் நோக்கத்தையும் பாப்புலர் ஃப்ரண்டின் எதிர்காலத்திட்டத்தையும் லட்சியத்தையும் குறித்து விரிவாக உரை நிகழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து அகில இந்திய மில்லி கவுன்சில் தலைவர் மௌலானா அஸ்ராருல் ஹக்காஸிமி, பாபரி மஸ்ஜித் மீட்புக்குழு தலைவர் வழக்கறிஞர் ஜஃப்ரியாப் ஜீலானி, அஸ்ஸாம் யுனைடெட் டெமாக்ரடிக் ஃப்ரண்ட் செயல்தலைவர் ஹஃபீஸ் ரஷீத் சவுத்ரி, மில்லி கெஜட் ஆசிரியர் டாக்டர் ஜஃபருல் இஸ்லாம் கான், அகில இந்திய மில்லி கவுன்சில் துணைத் தலைவர் மௌலானா யாசீன் உஸ்மானி, பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பொருளாளர் மௌலவி ஷேக் முஹம்மது தெஹ்லான் பாகவி, பாப்புலர் ஃப்ரண்ட் தமிழகத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா, கேரளா தலைவர் வி.பி. நஸ்ருதீன், கர்நாடகா தலைவர் கே. அப்துல் லத்தீஃப் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கோழிக்கோடு பிரகடனம்
பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு உறுப்பினரும், தேஜஸ் மாதமிருமுறை இதழ், நாளிதழின் ஆசிரியருமான பேரா. பி.கோயா மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய துணைத் தலைவர் ஏ.சயீது ஆகியோர் கோழிக்கோடு பிரகடனத்தை (Calicut Declaration) வெளியிட்டனர்.
நமது அரசியல் சாசனம் இந்தியா ஒரு சோஷலிஷ மதச்சார்பற்ற மக்களாட்சி நாடாகும் என்று பிரகடனப்படுத்துகிறது. நாட்டின் அடிப்படைத்தத்துவங்களையும் கொள்கைகளையும் அபாயத்தில் தள்ளிவிடும் ஏற்பாடுகளில் இந்திய அரசாங்கம் இப்போது அதிகம் முன்னோக்கிச் சென்றிருக்கிறது. நாட்டின் இறையாண்மையில் வெளிநாட்டு சக்திகள் தலையிடுவதற்கான நிலைமை உருவாக்கப்பட்டது. நமது தேசத்தின் அன்றாட நிர்வாகத்தில் அந்நிய நாட்டு வல்லுநர்களின்தலையீடு நம்மை கவலை கொள்ளச் செய்கிறது. உலக அளவிலான பொருளாதார நிறுவனங்கள். நாட்டின் கொள்கை நிலைப்பாடுகளில் கைவைக்கின்றன.
உலக மயமாக்கலும், தனியார் மயமாக்கலும் மூலமாக தொழில்கள் நஷ்டமடைந்து கொண்டிருக்கிறது. தொழிலாளிகளின் உரிமைகள் பிடுங்கப்படுகிறது. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு குத்தகைதாரர்களின் விருப்பங்களை பேணிப்பாதுகாக்க ஆர்வம் காட்டும் அரசாங்கம் மக்களை வஞ்சிக்கும் நடவடிக்கைகளுடன் முன்னேறிக்கொண்டிருக்கிறது. ஊனமான முன்னேற்ற நடவடிக்கைகளில் சுற்றுப்புற பிரச்சினைகளும் விவசாய மண்டலமும் புறக்கணிக்கப்படுகிறது. பூமியும் செல்வங்களும் அடிப்படை இயற்கை வளங்களும் குத்தகைகாரர்களுக்கு பட்டா போட்டு கொடுக்கும் முறை பரவிக் கொண்டிருக்கிறது. நாட்டின் குடிமக்களுக்கு அதில் எதிர்ப்பு இருக்கிறது. எதிராக ஓசை எழுப்புபவர்களை பொய்க் குற்றம் சுமத்தியும் கடினமான சட்டங்களை பிரயோகித்தும் அரசாங்கம் நசுக்குகிறது. அது மட்டுமல்லாமல் போலி என்கவுண்டர் மூலமாக கொலையும் செய்கின்றனர். வாழ்க்கை கேள்விக்குறியான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
உலகமயமாக்களுடையதும் தனியார்மயமாக்குதலுடையதும் பொருளாதார தாராளமயமாக்குதலின் தொடர்ச்சியாக நாடு ஏகாதிபத்தியத்தையும் அங்கீகரித்தது. அணிசேரா அமைப்பின் முன்னால் நிற்கக் கூடிய போராளிகள் இப்போது பெரும் சக்திகளின் விருப்பங்களை காப்பவர்களாக மாறி விட்டனர்
இன, வர்க்க, நிற பாகுபாடு நாட்டில் வலுவாக தொடர்கிறது. சமூக நீதி சட்டங்கள், நடை முறைப் படுத்தப்படுவதில்லை. அரசாங்கத்தில் மேல் ஜாதி மேதாவித்தனம் உரிமை மறுப்புகளுக்கும் சட்டத்தை மீறுவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது.
மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள் ஏழைகளாகவே இருக்கிறார்கள். உலகத்தில் அதிகமான மக்கள் வறுமையில் வாடுவது இந்தியாவில்தான். இந்தியாவில் பெருகிவரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையின் பின்னணியில் ஏழைகளின் கவனிக்கப்படாத முகங்கள் மறைந்திருக்கின்றன. செல்வம் ஒரே இடத்தில் மட்டும் குவிந்து கொண்டிருப்பதற்கும் பண வீக்கத்திற்கும், சுரண்டலுக்கும் காரணமாகும் வட்டி, நம்முடைய பொருளாதார மண்டலத்திலிருந்து நீக்கப்பட வேண்டும். இருப்பவர்களிடமிருந்து இல்லாதவர்களுக்கு தேவைப்படுவோருக்கு தேவைக்கேற்ப பணம் சென்று சேரும் நிலைமை உருவாக வேண்டும்.
சமத்துவமின்மையும், பாகுபாடும் இல்லாத நாட்டின் இறையாண்மை அடகு வைக்கப்படாத புதியதோர் அரசியல் முன்னேற்றம் இந்தியாவிற்கு இன்றியமையாதது அகும். நாட்டின் உள்ளேயும் வெளியேயும் உள்ள இனவெறி சக்திகள் அரசாங்கத்தில் செலுத்தும் செல்வாக்கு மதச்சார்பின்மையை பலவீனப்படுத்தியது.
நாட்டில் நடைபெறும் முஸ்லிம் கூட்டுக் கொலைகளை தடுக்க அரசாங்க நடவடிக்கை எடுப்பதில்லை. குற்றவாளிகளை முன்மாதிரியாக தண்டிப்பதில்லை சிறப்பு அதிகார சட்டங்கள் பொதுவாக ஏழைகளுக்கெதிராகவும், குறிப்பாக தலித் சமூகம் மற்றும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகவும் அமுல்படுத்துகிறார்கள்.
பயங்கரவாத எதிர்ப்புப் போர் என்பது அமெரிக்காவின் அஜென்டாவாகும். ஏகாதிபத்தியத்தை  எதிர்த்து போராடுபவர்களுக்கு எதிராக உருவம் கொடுத்த அரசியல் தந்திரம்தான் அது. அதன் பின்னணியில் மதக் காழ்ப்புணர்ச்சியும் உண்டு.
முஸ்லிம்கள் அதன் பலிகடாக்கள். இந்தியா அதற்கு ஆதரவளித்தது. அமெரிக்க இஸ்ரேல் திட்டம் அமுல்படுத்துவதற்கு நாட்டின் அரசு இயந்திரம் விட்டுக் கொடுக்கப்பட்டது. இந்தத் தொடர்புக்குப் பின் சந்தேகத்தை கிளப்பும் குண்டுவெடிப்புகள் பெருகின. இந்தியாவில் அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு பொறுப்பாளிகள்.
சுதந்திர இந்தியாவின் சிறப்பான அரசியல் முஸ்லிம்கள் தாழ்வுமனப்பான்மைக்கு அடிமைப்பட்டனர். சுதந்திரமான ஒரு அரசியல் முன்னேற்றம் தவறானது என்று அவர்கள் எண்ணினர்.
முஸ்லிம் ஓட்டுக்களை உபயோகிக்க உற்சாகம் காட்டும் தேசிய அரசியல் கட்சிகள் அவர்களை சம பங்காளி களாக்கி உள்ளே அனுமதிக்கவில்லை. இதனவெறி அக்கிரமங்களில் சட்டம் ஒழுங்கின் பேணுதல் கிடைக்கவில்லை. இனவெறி சக்திகளுடன் அரசாங்கம் கைகோர்த்துக் கொண்ட போது முஸ்லிம்கள் பீதிக்கு அடிமைப்பட்டனர். முஸ்லிம்களின் சமூக பொருளாதார அழிவை உறுதிப்படுத்த திட்டமிட்டசதிகள் இருந்த துண்டு. அடிப்படைத் தேவைகள் மறுத்தும், புறக்கணித்தும் சமூக அடிமைத்துவத்தை மக்கள் மீது திணித்தனர். அனைத்து அரசியல் கட்சிகளும் பங்காளிகளாவார்கள்.
சமுதாயத்தில் கீழ் மட்டம் வரை இறங்கி அடித்தட்டு மக்களின் எழுச்சிக்கான செயல்பாடுகளை நடத்த முஸ்லிம் முன்னணி இயக்கங்கள் களமிறங்க வேண்டும். உரிமை உணர்வும், இயக்க உணர்வும், அரசியல் உணர்வும் உருவாக்கப்பட வேண்டும்.
மக்களாட்சிக்கும், மதச்சார்பின்மைக்கும் சமூக பொருளாதார சமத்துவத்திற்கும் மதிப்பளிக்கும் நாட்டின் அனைத்து வகுப்பினரும் அடங்கிய அரசியல் முன்னேற்றத்திற்கு முஸ்லிம்கள் முன்னின்று களமிறங்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *