Breaking News

பெங்களூர் : Feb 15 – 17 – 2007 எம்பவர் இந்தியா மாநாடு

20120805143610பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலிமையான இந்தியாவை உருவாக்க மாநாடு (Empower India Conference) 2007 பிப்ரவரி 15ம் நாள் முதல் 17ம் நாள் வரை மூன்று நாட்கள் பெங்களூர் பேலஸ் கிரவுண்டில் ஷஹீத் திப்பு சுல்தான் நகரில் நடைபெற்றது.
முதல் நாள் காலை 9.15 மணியளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் இ. அபூபக்கர் அவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட்டின் மூவர்ணக் கொடியை ஏற்றி, மநாட்டைத் துவக்கி வைத்தார். அப்பொழுது பாடப்பட்ட நமது தேசியப்பாடலான ‘சாரே ஜஹான்சே அச்சா” தேசிய உணர்வு மிக்க சூழலை அங்கே ஏற்படுத்தியது.
முன்னதாக, பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு உறுப்பினர் மௌலானா கலீமுல்லாஹ் ரஷாதீ, மாநாடு சிறப்புற நடைபெறுவதற்காகவும்த நமது தேசத்தை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்லும் பாப்புலர் ஃப்ரண்டின் இலட்சியம் ஜெயம் பெற வேண்டியும் துஆ ஓதி வல்ல இறைவனிடம் பிரார்த்தித்தார். பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு உறுப்பினர்கள், என்.டி.எஃப்., எம்.என்.பி., கே.எஃப்.டி. ஆகிய அமைப்புகளின் மாநிலத் தலைவர்களும் செயல் வீரர்களும் அதில் கலந்து கொண்டனர்.
உரையாடல் அமர்வுகள்
காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை அனைத்து வகையான பாகுபாடுகளுக்கெதிரகாவும் போராடுவதற்காக நான்கு தலைப்புகளில் தனித்தனி அரங்குகளில் ஒரே நேரத்தில் உரையாடல் அமர்வுகள் நடைபெற்றன. நாட்டில் தலைசிறந்த அறிஞர் பெருமக்கள் இதில் கலந்து கொண்டனர்.
மனித உரிமைகள்
ஷஹீத் பஹதூர் ஷா ஜாஃபர் அரங்கில் நடைபெற்ற இந்த அமர்வில், கர்நாடகத்தில் உள்ள பி.யூ.சி.எல் அமைப்பின் தலைவர் பேரா. ஹஸன் மன்சூர் சிறப்புரையாற்றினார்.
“பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினரான ஒரு பெருங்கூட்ட மக்களைப் புறக்கணித்து விட்டு ஒரு நாடு முன்னே றிட இயலாது. ஒதுக்கப்படும் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அவர்களுக்கு இழைக்கப்படும் பாகுபாட்டை எதிர்த்துப் போரிட முன்வர வேண்டும். பாப்புலர் ஃப்ரண்ட் இந்தப் பணியை எடுத்துச் செல்வதில் முன்னிலையில் நின்று செயல்பட வேண்டும்” என்று அவர் கூறினார். பெங்களூரைச் சேர்ந்த பேரா. நகரி பாபையா, பிராமணிய எதிர்ப்புப் போராளி வி.டி. ராஜசேகர்,  எழுத்தாளரும் மனித உரிமைப் போராளியுமான ஷிவ சுந்தர் ஆகியோர் இந்த விவாதத்தில் பங்கு கொண்டனர்.
சட்டப்பாதுகாப்பு
ஷஹீத் பகத்சிங்க அரங்கில் நடைபெற்ற இந்த அமர்வில் பாப்புலர் ஃப்ரண்டின் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கே.பி. முஹம்மது ஷரீஃப் உரை நிகழ்த்தினார்.
“சாதாரண மக்களுக்கு சட்டத்தைப் பற்றிய போதிய அறிவின்மையே அவர்களுக்கான நீதி மறுக்கப்படுவதற்கு முக்கிய காரணமாகும் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஒன்றே இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உரிய மருந்தாகும். இந்த இமாலய முயற்சியை மேற்கொள்ள அகில இந்திய வழக்கறிஞர் அமைப்பு ஒன்றை ஏற்படுத்த பாப்புலர் ஃப்ரண்ட் தீர்மானித்துள்ளது” என்று அவர் கூறினார். நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் இந்த விவாதத்தில் பங்கு கொண்டனர்.
இடஒதுக்கீடு
ஸையது அஹ்மது ஷஹீத் அரங்கில் இடஒதுக்கீடு குறித்த விவாத அமர்வு நடைபெற்றது. திருவனந்தபுரம் முஸ்லிம் அசோசியேஷன் தலைவர் பேரா. எம். பஷீர் விவாத அரங்கிற்கு தலைமை வகித்தார். “இந்திய சமூகத்தில் இடஒதுக்கீடு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இது நமது அரசியலமைப்புச் சட்ட உரிமை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை வலிமைப்படுத்த இடஒதுக்கீடு அவசியம் என்றுள்ளது” என்று அவர் உரை நிகழ்த்தனார்.
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் முனைவர் அர்ஷிகான், கர்நாடகா முஸ்லிம் அசோசியேஷன் துணைத் தலைவர் ரஷீத் பின் நாய காதி, கேரளா முஸ்லிம் பணியாளர்கள் கலாச்சார சங்கத்தின் தலைவர் என்.கே. அலீ, கர்நாடகா சிறுபான்மையினர் கல்வி அமைப்பின் தலைவர் சி.ஆர். முஹம்மது இம்தியாஸ் ஆகியோர் இவ்விவாதத்தில் பங்கெடுத்து உரையாற்றினர்.
ஊடகத் தலையீடு
ஷஹீத் குஞ்ஞாலி மரைக்காயர் அரங்கில் நடைபெற்ற இந்த விவாத அமர்வில் உரையாற்றிய பெங்களூலிருந்து வெளிவரும் இஸ்லாமிக் வாய்ஸ் என்ற ஆங்கில மாத இதழின் ஆசிரியர் சாததுல்லாஹ் கான், “முஸ்லிம் சமூகம் ஊடகத் தளத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
அடுத்ததாக உரையாற்றிய டெல்லியிலிருந்து வெளிவரும் மில்லி கெஸட் ஆங்கில மாதமிருமுறை இதழின் ஆசிரியர் ஜஃபருல் இஸ்லாம் கான், “வணிக மயமாக்கப்பட்டுவிட்ட ஊடகங்கள் லாபம் ஈட்ட பொய்யான செய்திகளை பரபரப்பாக வெளியிட்டு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான ஊடகங்களாகவே மாறி வருகின்றன. இதனை எதிர்கொள்ள முஸ்லிம்கள் ஒரு மாற்று ஊடகத்தைக் கொண்டு வர வேண்டும்” என்று கூறினார்.
முன்னேற்றமும் வலிமையாக்கலும்  மாற்று வழிகளைத் தேடி… தேசியக் கருத்தரங்கம்
லுஹர் தொழுகை, உணவு இடைவேளைக்குப் பிறகு பிற்பகல் 2.30 மணியளவில் டாக்டர் அம்பேத்கர் அரங்கில் (Development and Empowerment Quest for Alternatives) முன்னேற்றமும் வலிமையாக்களும்  மாற்று வழிகளைத்தேடி… என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் துவங்கியது.
பாப்புலர் ஃப்ரண்டின் பொதுச் செயளலாளர் இ.எம். அப்துர் ரஹ்மான் தலைமை வகித்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இதில் சிறப்புரையாற்ற லண்டனிலிருந்து வந்திருந்த தலைசிறந்த பத்திரிகையாளரான ஆலன் ஹார்ட் தனது உரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
“ஃபலஸ்தீனப் பிரச்சினை சர்வதேச நிகழ்வுகளின் இதயத்தில் விழுந்த புற்றுநோய். அமெரிக்காவின் நவீன  ஃபாசிஸ ஏகாதிபத்தியம் வெற்றி பெறுமேயானால் இந்தப் பகுதியில் இஸ்ரேல் போன்றே இந்தியா செயல்படும் என நான் எச்சரிக்கிறேன்.
மத்திய கிழக்கில் அமைதியும் நீதியும் நிலவ முடியாமல் போவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, ஸியோனிஸத்தையும் யூத மதத்தையும்  ஜுதாயிஸத்தையும் (Judaism) ஒரு சேர பரப்பிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் அரபு நாடுகளை மிரட்டிக் கொண்டிருக்கிறது. இரண்டாவது, பண்டைய ஸியோனிஸ வரலாற்றில் கட்டியமைக்கப்பட்ட ஜூதாயி  கிறிஸ்தவ ஒப்பந்தம் இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பதுதான்.
ஜூதாயிஸம் என்பது வேறு ; ஸியோனிஸம் என்பது வேறு இரண்டையும் மக்கள் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் இரண்டும் ஒன்றுதõன் என்று நிரூபிக்க ஸியோனிஸ்டுகள் (யூதர்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள். ஃபலஸ்தீனத்தை ஆக்கிரமித்து அங்கு யூதர்களுக்கான ஒரு காலனி நிலப்பரப்பை உருவாக்க வேண்டும் என்ற வஞ்சக எண்ணத்தைக் குறிக்கோளாகக் கொண்ட சிறுபான்மையினரிலும் சிறு பான்மையினரான ஒரு சில யூதர்களின் தேசியவாதமே ஸியோனிஸம்.
யூதர்களால் தங்கள் நிலத்தை இழந்து உரிமைகளை இழந்து நின்று கொண்டிருக்கின்றார்கள் ஃபலஸ்தீன மக்கள். அவர்கள் அனுமதித்தாலொழிய ஸியோனிஸ நாடு அங்கே நிலைபெற்றிருக்க எந்த உரிமையும் கிடையாது. (உலகின் அனைத்து பாகங்களிலும் ஒண்ட இடமின்றி யூதர்கள் விரட்டியடிக்கப்பட்டபொழுது அவர்களை அரவணைத்து நிம்மதியாக வாழ இடமளித்தது இஸ்லாமிய சாம்ராஜ்யம் மட்டும்தான் என்பது வரலாறு பதிவு செய்து வைத்திருக்கும் உண்மை).
உண்மையான ஜனநாயகத்தின் மூலம் மட்டுமே அதி சக்திவாய்ந்த ஆயுதமான சத்தியம் என்ற கூர்வாளால் மட்டுமே ஸியோனிஸத்தைத் தோற்கடிக்க முடியும்.
வலிமையான இந்தியாவை உருவாக்கும் மாநாட்டில் நாம் அனைவரும் ஒன்று கூடியிருக்கும் இந்த இனிய வேளையில் நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். காரணம், உங்களுடைய நல்ல எண்ணங்களிலும், நோக்கங்களிலும் நானும் ஒன்றிணைந்து கொண்டேன்.
உங்களுடைய இப்பாரிய தேசத்தின் பிரகாசமான எதிர் காலம் பாதுகாக்கப்பட வேண்டுமேயானால், தேசத்தின் அனைத்துக் குடிமக்களையும் எல்லா ரீதியிலும் பலப்படுத்துவது (Empowerment) ஒன்றைத் தவிர வேறு எதுவும் பலன் தராது. இந்தப் பணி இப்போது அதி முக்கியமானது. இதன் மூலம் மட்டுமே உண்மையான ஜனநாயகத்தை உருவாக்கி நீதிமிக்க, நேர்மையான இந்திய சமகத்தைக் கட்டமைக்க முடியும் (மத்திய அரசு) அரசாங்கங்களின் (மாநில அரசுகள்) உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகளை நீங்கள் விவாதிக்க வேண்டும்; அதில் ஏற்படும் தவறுகளை சரி செய்ய வேண்டும்.
உண்மையான ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்று சொன்னால், தேசத்தின் கொள்கை விவகாரங்களில் (Policy matters) குடிமக்களும் பங்கெடுத்து விவாதிக்க அனுமதிக்கப்பட வேண்டும். தேசம் எடுக்கும் கொள்கை முடிவுகளை பற்றிய மக்களின் கேள்விகளுக்கு நாட்டை ஆள்பவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்ற தொரு நிலையை உருவாக்க வேண்டும்.
உலகில் எங்குமே உண்மையான ஜனநாயகம் தழைத்திருக்கவில்லை. மற்ற நாடுகளைப் போன்றே, அமெரிக்கர்களும் தங்களுடைய கொள்கை முடிவுகளை மக்களுக்கு அறிவிக்க மறுக்கிறார்கள்; அந்த மக்களை பலப்படுத்த மறுக்கிறார்கள் : இதன் மூலம் ஜனநாயகத்தை நிலைநாட்ட மறுக்கிறார்கள்.
இந்தியாவை வலிமைப்படுத்துவது என்பது உங்களுடைய பணி. ஆனால் இதைக் கடந்து மற்றொரு தலையாய பணி காத்திருக்கிறது. இதனை நீங்கள் மட்டுமல்ல, அனைத்து தேசங்களின் குடிமக்களும் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். அதுதான், ஃபலஸ்தீன மக்களை பலப்படுத்துவது மத்திய கிழக்கில் நீதியும் அமைதியும் நிலைபெற ஓர் உண்மையான ஜனநாயகத்தை உருவாக்குவது இஸ்ரேல் துவக்கி வைத்து நடத்திக் கொண்டிருக்கின்ற துன்பியல் நாடகத்தின் இறுதிப் பகுதியின் முடிச்சுகளை அவிழ்க்கும் செயலாக இது அமைய வேண்டும்.
வலிமைப்படுத்துதல் என்பது இன்று நாம் பேசுவதோடு முடிந்திடுவது அல்ல. மாறாக, அது ஒரு தொடர் செயல்பாடாகும். வலிமைப்படுத்துதல் என்பதை முதலில் மக்களுக்கு அறிவிக்க வேண்டும்; அதாவது, அதனைப் பற்றிய ஒரு தொடர் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும்; அதன் பிறகு மக்கள் ஒன்று திரட்டப்பட வேண்டும். இதற்காக யுத்திகளும் திட்டங்களும் தீட்டப்பட வேண்டும்; இதற்கான வளங்களை உருவாக்க வேண்டும்; அமைப்புகள், இயக்கங்களின் மூலம் மக்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அதன் பிறகே வலிமைப்படுத்துதல் என்பது சாத்தியமாகும்” என்று கூறினார்.
“இந்தியா தனது இராணுவ பலத்தை உயர்த்திக் கொண்டிருக்கும் வேளையில் வல்லரசு என்ற ஸ்தானத்தை எட்டிப் பிடிக்க முயன்று கொண்டிருக்கும் இவ்வேளையில் நாடெங்கிலும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடன் தொல்லையாலும், பட்டினியாலும், மடிந்து கொண்டிருப்பது வேதனையளிக்கின்றது” என்று பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு உறுப்பினரும் கேரளாவில் இருந்து வெளிவரும் தேஜஸ் நாளிதழின் ஆசிரியருமான பேரா. பி. கோயா அன்று உரையாடல் அமர்விற்கு அனுப்பியிருந்த தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
வரலாறு எவ்வாறு திரிக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றிக் கூறிய கேரளாவைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரும் தலித் சமூக விடுதலைப் போராளியுமான முனைவர் எம்.எஸ். ஜெயப்பிரகாசம், “ஆரியர்கள் இந்தியாவைத் தனதாக்கிக் கொள்ள அனைத்து சமூக வரலாற்றையும் சிதைத்து புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளனர். வரலாற்றை திரிப்பதன் மூலம் மட்டுமே ஒரு சமூகத்தை சிதைக்க முடியும் என டாக்டர் அம்பேத்கர் கூறினார். அந்தப் பணியை குறிப்பாக மத சிறுபான்மையினரைõன முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோரின் வரலாற்றைச் சிதைக்கும் அந்தப் பணியை இந்துத்துவ சக்திகள் செவ்வனே செய்து வருகின்றன” என்று குறிப்பிட்டார்.
“பிராமணீயத்தை மீறிச் செயல்பட முடியாவண்ணம் அனைவருடைய சிந்தனையும் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. அதனைத் தாண்டி யாராலும் சிந்திக்க இயலாது என்ற ஒரு நிலை பன்னெடுங்காலமாக நமது நாட்டை முன்னேறவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் பிரõமணீய சக்திகளால் உருவாக்கப்பட்டு விட்டது. பிராமணர்கள் இந்து தெய்வங்களையும் இந்து மதத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது மட்டுமல்ல; சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் கட்டுப்படுத்தி, யாரும் கேள்வி கேட்க முடியாத அளவிற்கு முடிசூடிய மன்னர்களைப் போல ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.
மார்க்ஸியத்தின் மீது  கம்யூனிசத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி மார்க்ஸிய அமைப்புகளின் தலைமையைக் கைப்பற்றி விட்டது பிராமணீயம். மார்க்ஸியம் என்பது பிராமணீயத்தின் மறுவடிவமே” என பெங்களூரில் இருந்து வெளிவரும் தலித் வாய்ஸ் மாத இதழின் ஆசிரியர் வி.டி. ராஜசேகர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் “இந்திய தேசியம் இங்குள்ள தேசியக் குடிகளாகிய சிறுபான்மையினரின் உரிமைகளை மறுத்துக் கொண்டிருப்பது அது பார்ப்பனியச் சிந்தனையால் புரையோடிப் போய் இருப்பதையே காட்டுகின்றது. பார்ப்பனமும் சமஸ்கிருதமுமே இந்திய தேசியம் என்றாகி விட்டது. இந்நிலை மாற்றப்பட வேண்டிய ஒன்றாகும்” எனக் குறிப்பிட்டார் அதன் பிறகு “தேசியக் கட்டமைப்பில் சிறுபான்மையினரின் பங்கு’ என்ற தலைப்பில் மில்லி கெஜட் ஆங்கில மாதமிருமுறை இதழின் ஆசிரியர் ஜஃபருல் இஸ்லாம் கான், “தேசியவாதம் மற்றும் அதில் வசிக்கும் தேசிய சமூகங்களின் கேள்விகள்” என்ற தலைப்பிலும், “தீவிரவாதத்தின் உண்மைக் குற்றவாளிகள் யார்?” என்ற தலைப்பிலும் பெங்களூரைச் சேர்ந்த பேரா. நகரி பாபைய்யா, “மாற்று ஊடகத்திற்கான தேவை” என்ற தலைப்பில் போபாலைச் சேர்ந்த பர்வேஷ் பாரி ஆகியோர் விவாதம் நடத்தினார்.
மாநாட்டின் இரண்டாம் நாள் காலை 9.30 மணியளவில் சமூக ஆர்வலர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. டெல்லி, மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறு சமூக ஆர்வலர்களும், பத்திரிகையாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் பங்கு கொண்டனர்.
பிற்பகல் 2.30 மணியளவில் கர்நாடக மக்களுக்கென பிரத்தியேகமாக, “ஃபாசிஸத்தின் சவால்களும் கர்நாடகமும்” என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மங்களூர் பல்கலைக் கழக விரிவுரையாளர் பட்டாபிராம சோமையாஜி, கர்நாடக கோமு கௌஹார்டா வேதிகே என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் கே.எல். அஷோக், எழுத்தாளர் (Columnist) ஷிவ சங்கர், வார்தா பாரதி நாளிதழின் இயக்குநர் யாஸீன் மால்பே, தாவான்கிரியைச் சேர்ந்த பத்திரிகையாளர் பேரா. சந்திர சேகரா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இறுதிநாள் நிகழ்ச்சியாக மூன்றாம் நாள் மாலை 4 மணி முதல் 9 மணி வரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் இருந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அதில் கலந்து கொண்டு சமூக வலிமையைப் பறைசாற்றினர். பாப்புலர் ஃப்ரண்டின் பொதுச் செயலாளர் இ.எம். அப்துர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார் இக்கூட்டத்திற்கு தலைமை வகித்த பாப்புலர் ஃபிரண்டின் தலைவர் இ. அபூபக்கர் உருது மொழியில் ஆற்றிய உரையில் இவ்வாறு குறிப்பிட்டார்:
பாப்புலர் ஃபிரண்டின் தலைவர் இ. அபூபக்கர் உரை
“நாம் இன்று ஒன்று கூடியுள்ள நகருக்கு ஷஹீத் திப்புசுல்தான் நகர் என்று பெயரிடப்பட்டுள்ளது. பிரிட்டீஷ் ஏகாதிபத்திய அடிமைத்தனத்திலிருந்து இந்த நாட்டை விடுதலை செய்வதற்காக மரணிக்கும் வரை போராடி உயர்ந்த, உன்னதமான அந்தஸ்திற்குரிய ஷஹாதத்தை அடைந்தவரே ஷஹீத் திப்புசுல்தான்.
பாப்புலர் ஃப்ரண்டின் இப்பிரம்மாண்டமான மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்நகருக்கு ஷஹீத் திப்பு சுல்தான் நகர் என்று பெயரிடுவதற்கு காரணம் ஒரு முக்கிய பிரகடனமே!
உலகம் முழுவதும் இன்று காலனி ஆதிக்கத்திற்கும் சர்வதேச தீவிரவாதத்திற்கும் எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதில் முதல் அணியில் நின்று அந்தப் பாதையில் போடி ஷஹீதாக நாம் தயார்.
அன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போரிட்டதற்கு உண்மையான உயரிய அடையாளம் ஷஹீத் திப்பு சுல்தான்.
இன்று அமெரிக்க தீவிரவாதத்திற்கு எதிராகப் போராடக்கூடிய நாம், அமெரிக்க ஆதிக்க வெறிக்கு பயந்து நடுங்கி கீழ்ப்படிந்து கொண்டிருககும் ஆட்சியாளருக்கு எதிராகப் போராடிட தயாரா?
ஒருவேளை நீங்கள் அமெரிக்க காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராகப் போரிடத் தயாரானால், ஒரு விஷயத்தை உங்களுக்கு உறுதியாகக் கூறிக் கொள்கிறேன்…
“அமெரிக்காவினால் தயார்படுத்தப்பட்ட தூக்குக் கயிறு உங்களின் கழுத்தை நோக்கி புன்சிரிப்புடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறது.”
சகோதரர்களே! இம்மாநாடு இந்தியாவில் அநியாயத்திற்கும், அநீதிகளுக்கும் உள்ளாக்கப்படும் கோடிக்கணக்கான முஸ்லிம்களின், பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒருங்கிணைப்புக்கான ஓர் பிரகடனமாகும்! சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடும் ஒரு பிரடகனம்!
அநியாயக்காரர்களே! வேண்டாம். ஓ காட்டுமிராண்டிகளே! “மான்ஷாதா!” நிறுத்திக்கொள்! என்று வீர கானம் பாடும் வீர முள்ள இளைஞர்கள் பிறந்து விட்டார்கள்.
என்முன்னால் திரளõக ஆயிரக்கணக்கான மக்கள் அமர்ந்திருக்கிறார்கள். இம்மக்கள் தனது கொள்கைக்காக, இலட்சியத்திற்காக, அநீதிக்குள்ளாக்கப்பட்டவர்களுக்காக, தனது நாட்டிற்காக கவலையுடன் சிந்திக்கக்கூடிய, யாருக்கு முன்னாலும் தலை குனியாத எல்லோர் முன்னிலையிலும் நிமிர்ந்து நிற்கும் முதுகெலும்புள்ளவர்கள்.
என் முன் இருக்கும் பல்லாயிரக்கணக்கானவர்களே! நீங்கள் மற்றவர்களுக்காக உயிரையும்உடைமையையும் அர்பணிக்க தயாராக இருக்கிறீர்கள். ஆனால் மற்றவர்கள் தங்களுக்காக செயல்படுகிறார்கள்.
பாப்புலர் ஃப்ரண்ட் பிறந்த உடனே சந்தேகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. சிலருக்கு இது ஒரு அரசியல் கட்சியா என்ற சந்தேகம்?
நாம் அரசியலை பேசிக்கொண்டே பிறந்தோம், ஆனால் இன்றுவரை நாம் ஒரு அரசியல் கட்சியாக உருவாகவில்லை. இந்திய முஸ்லிம்கள் ஆட்சி, அதிகாரம், அரசியலில் ஏன் பின்தங்கிவிட்டார்கள்? என முழுமையான ஆய்வு செய்து எங்களின் கணிப்புகளை மக்கள் முன்பு சமர்ப்பிப்போம். அதனின் எதார்த்தங்களையும் மக்கள் முன்பு சமாப்பிப்போம்.
அதனை அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய அரசியல் பார்வையுடன், சிந்தனை சக்தியுடன் ஒரு இலட்சியம் கொண்ட அரசியல் இயக்கங்கள் உயிரோட்டம் பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
சிலர் நம்மை இந்துக்களின் எதிரி என்று கூறுகின்றார்கள். பாப்புலர் ஃப்ரண்டின் முழு பொறுப்புள்ளவர் என்ற நிலையில் கூறுகிறேன். நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல.
இந்து, இந்துத்துவா இரண்டும் வேறுபட்ட விஷயமாகும். இந்துத்துவா என்பது முஸ்லிம்களின் மீது முழுமையான வெறுப்பை அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசியல் கொள்கையாகும். மேலும் முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்வதற்கு தகுதியற்றவர்கள் என்று அவர்கள் விஷத்தைக் கக்குகிறார்கள். அவர்களுக்கு மதம் பிடித்து விட்டது. இது இந்நாட்டின் அதிகமான இந்துக்கள் அறிந்த உண்மையே! அப்படியிருக்க நாம் எப்படி இந்துக்களுக்கு எதிரானவர்களாக இருப்போம்!?
மகாத்மா காந்தியையும் அவரைக் கொன்றவனையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது நம்மிடத்தில் நடக்காது. காந்திஜியுடன் சாவர்க்கரின் உருவப்படத்தை பாராளுமன்றத்தில் நீங்கள் வைக்கலாம் ஆனால் எங்களிடம் அது நடக்காது.
நல்லெண்ணம் கொண்ட இந்துக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ஆர்.எஸ்.எஸ்.ன் இந்துத்துவா கொள்கையை நீங்கள் புறக்கணிக்க வேண்டும் இந்துக்களிலிருந்து அவர்களை தனிமைப்படுத்த வேண்டும்!
இறுதியாக ஒன்றைக் கூறிக்கொள்கிறேன். நீதிக்காகவும், உரிமைக்காகவும், பிச்சையும், யாசகமும் கேட்கும் நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
மாறாக, ஒரு ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கு தயாராக வேண்டும். அதற்கான வழிமுறைகளை நாம் உருவாக்க வேண்டும். இதற்காக இப்போதுள்ள அனைத்து இலக்கண விதிகளையும் தகர்த்தெறியலாம்.
எம்முன்னால் அமர்ந்திருக்கும் இம்மாபெரும் மக்கள் சங்கமதத்தை சாட்சியாக வைத்துக் கூறுகின்றேன். இங்கே! இந்த நிமிடம்! வரலாற்றில் ஒரு புதிய திருப்பு முனை ஏற்படுவதற்கான நேரம்! ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் விடுதலை, நிம்மதிக்கான சங்கொலி முழங்கி விட்டது! புதிய காரவான் (பயணம்) பிறந்து விட்டது!
அனைத்துத் தரப்பு மக்களுக்கம் சம அளவிலான சுதந்திரம், நீதி, பாதுகாப்பு ஆகியவற்றை பெற்றுத் தருவதே பாப்புலர் ஃப்ரண்டின் நோக்கம்” என பிரகடனம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் செயலாளர் மௌலானா முஹம்மது வலீ ரஹ்மானி, அனைவராலும் நன்கு அறியப்பட்ட லண்டனைச் சேர்ந்த ஸியோனிஸ எதிர்ப்பு பிரச்சாரகர் ஆலன் ஹார்ட், அமெரிக்காவில் வசிக்கும் ஆஃப்ரிக்க சமூக வியலாளர் ஹுதைரி அப்துல் அலீ, பெங்களூரிலிருந்து வெளிவரும் லங்கேஷ் வார இதழின் முதன்மை ஆசிரியர் கௌரி லங்கேஷ், வார இதழின் முதன்மை ஆசிரியர் லங்கேஷ், என்.டி.எஃப்.ன் மாநில தலைவர் அப்துர் ரஹ்மான் பாகவி, கே.எஃப்.டி.யின் மாநிலத் தலைவர் கே.எம். ஷரீஃப், பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு உறுப்பினர் மௌலானா கலீமுல்லாஹ் ரஷாதீ ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
வலிமையான இந்தியாவை உருவாக்க பல்வேறு கோரிக்கைகளை உலியுறுத்தி இம்மாநாட்டில் ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எம்.என்.பி.யின் மாநிலத் தலைவர் எம். முஹம்மது அலீ ஜின்னா, என்.டி.எஃப்.ன் மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் கே.பி. முஹம்மது ஷெரீஃப், கே.எஃப்.டி.யின் செயலாளர் அனீஸ் அஹமது ஆகியோர் இத்தீர்மானங்களை முன் மொழிந்தனர்.
நிறைவாக, பாப்புலர் ஃப்ரண்டின் பொருளாளர் ஏ.எம்.எம். ஷாஃபி நன்றியுரை நிகழ்த்தினார். இரவு 9 மணிக்கு மாநாடு நிறைவுற்றது.
வலிமையான இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் ஏற்படும் கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள் இவற்றால் நாங்கள் ஒரு போதும் பின்வாங்க மாட்டோம்; இந்திய முஸ்லிம்களின் ஆண்மைத்தனத்தை பிரதிநிதித்துவப்படுத்துவோராக இன்ஷா அல்லாஹ் நாங்கள் இருப்போம்; புதிய இந்தியாவை உருவாக்க புதிய பாதையில் இன்றுமுதல் பயணிப்போம் என்று சூளுரைத்தவர்களாக மக்கள் அனைவரும் மாநாட்டிலிருந்து கலைந்து சென்றனர்.
மாநாட்டுத் தீர்மானங்கள்!
1. நவீன  காலனியாக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
2. இந்துத்துவ ஃபாஸிஸத்தின் கொடூர வடிவங்களை தோற்கடிக்க மக்கள் தயாராக வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
3. பெங்களூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத்திற்கு திப்பு சுல்தான் பெயரை சூட்ட வேண்டும் என மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
4. கல்வி, வேலைவாய்ப்பு முஸ்லிம்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
5. ஒதுக்கப்பட்ட சமூகங்களான முஸ்லிம்களும் தலித்துகளும் ஒன்றிணைந்து போராடும் நேரம் வந்து விட்டது அதற்கான பணியில் அனைவரும் துரிதமாக இறங்க வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
6. நீதித்துறை மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்ட அமைப்பு தான் என்பதை வலியுறுத்தும் வண்ணம் சட்டங்களை திருத்தம் செய்ய வேண்டும் என மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
7. காவேரி நதி நீரிலிருந்து உரிய பங்கினை அனைவருக்கும் வழங்க வேண்டும் என கர்நாடக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
8. பாபா புத்தங்கிரியின் காவி மயமாக்கலுக்கு எதிராக மக்கள் களமிறங்க வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
9. ஃபாஸிஸ்டுகளால் தகர்க்கப்பட்ட பாபரி மஸ்ஜிதை விரைந்து கட்டியெழுப்பி முஸ்லிம்களிடம் ஒப்படைக்க அரசும் நீதித்துறையும் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *