Breaking News

திருச்சி தெற்கு டிவிஷன் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற மக்கள் சங்கமம் மாநாடு மற்றும் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சி!

1இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட்ஆஃப்இந்தியா சார்பாக “சங்கமிப்போம் சக்திபெறுவோம்” என்ற முழக்கத்தோடு மக்கள் சங்கமம் மாநாடு ஏப்ரல், மே மாதங்களில் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு டிவிஷன் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மக்கள் சங்கமம் மாநாடு மற்றும் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சி 03-05-2015 அன்று நடைபெற்றது.

மக்கள் சங்கமம் மாநாடு பாப்புலர் ஃப்ரண்டின் திருச்சி தெற்கு டிவிஷன் தலைவர் M. சௌகத் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் SDTU வின் தமிழ் மாநில தலைவர் சம்சுதீன் அவர்களும், SDPIயின் திருச்சி மாவட்ட தலைவர் S.ரஹமத்துல்லா அவர்களும், NWFயின் திருச்சி மாவட்ட தலைவி அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

இதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில தலைவர் M.முகமது இஸ்மாயில் அவர்கள் ஆம்புலன்சை அர்பணிக்க ஜமாத் தலைவர்கள் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய குடும்பம் என்ற தலைப்பில் பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பேச்சாளர் ஹசன் இமாம் அவர்களும், இஸ்லாமிய கலாச்சாரம் என்ற தலைப்பில் பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பேச்சாளர் ரபீக் அவர்களும் இறுதியாக ஒளிமயமான எதிர்காலம் என்ற தலைப்பில் பாப்புலர் ஃப்ரண்டின் தமிழ் மாநில தலைவர் M.முகமது இஸ்மாயில் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள். இதில் SDPIயின் செயல்வீரர்களும், பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர்களும், ஜமாத்தார்களும், தாய்மார்களும் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருச்சி தெற்கு டிவிஷன் மாநாட்டு தீர்மானங்கள்:

1) பாரதிய ஜனதா அரசு மத்தியில் பொறுப்பேற்றதிலிருந்து இந்தியாவில் ஓர் அசாதாரண சூழல் நிலவுகிறது. சமூகங்களுக்கு இடையே நீடிக்கும் நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் பாஜக அமைச்சர்களும் அக்கட்சி தலைவர்களும் தொடர்ந்து வெறுப்பை உமிழும் வகையில் பேசி வருகின்றனர். சங்பரிவாரின் துணை அமைப்புகள் வகுப்புக் கலவர வெறியோடு செயல்படும் போக்கு அதிகரித்துள்ளது. வெறுப்பு பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தி இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை காக்கும் பொறுப்பில் உள்ள பிரதமர் மோடி, இதனைக் கண்டு கொள்ளாமல் மவுனம் காத்து வருவதை ‘மக்கள் சங்கமம்’ மாநாட்டுக் குழு வன்மையாக கண்டிக்கிறது.

2) இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் ஆதிவாசிகளை விட மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக சச்சார் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு பத்து சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி முஸ்லிம்களின் பொருளாதார கல்வி, பொருளாதார மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்க இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

3) மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க தேர்தல் பிரச்சாரத்தின் போது விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாக்கும் கட்சி என்று மக்களுக்கு போலி வாக்குறுதிகளை அளித்து ஆட்சியில் அமர்ந்தவுடன் நில அபகரிப்பு மசோதாவை நிறைவேற்றி விவசாயிகளைகளையும் மக்களையும் முதுகில் குத்தும் துரோகத்தை செய்துள்ளது. சமீபத்தில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக நடைபெற்ற நில அபகரிப்பு மசோதாவை ரத்து செய்ய கோரி நடைபெற்ற பேரணியில் ராஜஸ்தானை சேர்ந்த விவசாயி கஜேந்திர சிங் தற்கொலை செய்துகொண்டார். நாடு முழவதும் இது போன்ற பல ஆயிரக்கணக்கான விவசாயிகளின் மரணங்களுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். நில அபகரிப்பு மசோதாவை கண்டித்து பல போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்றாலும் பா.ஜ.க வை எதிர்ப்பதில் அனைத்து கட்சிகளும், விவசாய அமைப்புகளும் ஒருங்கிணைந்து போராடினால் தான் விவசாயத்தையும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வையும் பாதுகாக்க முடியும் என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைந்து போராட பாப்புலர் ஃப்ரண்ட் அழைப்பு விடுக்கிறது.

2 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *