Breaking News

நெல்லைமேற்குமாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற அரசு கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் முகாம்!

20140723115242

சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கு 2014 – 2015 ஆம் ஆண்டுகளுக்கான கல்வி உதவித்தொகையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த கல்வி உதவித் தொகை அனைத்து மக்களுக்கும் சென்றடையும் விதமாகவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் அரசு கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் முகாம்கள் நெல்லைமேற்குமாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத் துறைசார்பாக சங்கரன்கோவிலில் காவேரிநகர், புதுமனைதெரு, காயிதேமில்லத்தெரு ஆகிய இடங்களில் நடைபெற்றது. இம்முகாமில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டது. மேலும் இம்முகாமின் மூலம் பொதுமக்களிடம் அரசு கல்வி உதவித்தொகையைப் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *