Breaking News

வட சென்னை மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற வரலாற்று கண்காட்சி திறப்புவிழா நிகழ்ச்சி!

1இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கைநட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட்ஆஃப்இந்தியா சார்பாக “சங்கமிப்போம் சக்திபெறுவோம்” என்ற முழக்கத்தோடு மக்கள் சங்கமம் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியா முழுவதும் விமர்சையாக கொண்டாட உள்ளது.

இதன் ஒரு பகுதியாக வட சென்னை மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மக்கள் சங்கமம் என்ற பெயரில் மாபெரும் வரலாற்று கண்காட்சி திறப்புவிழா நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 25) இராயபுரம் பாரூக் மகாலில் காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுச்செயலாளர் M. முஹம்மது ஷேக் அன்சாரி , SDPI கட்சியின் மாநில தலைவர் K.K.S.M தெஹலான் பாகவி, பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது அலி நியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர் .

இதனை தொடர்ந்து நாளை ஏப்ரல் 26 அன்று பழைய வன்னாரபேட்டை யில் மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் M.முஹம்மது இஸ்மாயில் அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார்.

2 3 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *