Breaking News

நெல்லை மேற்கு மாவாட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி!

20140626202243

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “பள்ளி செல்வோம்” என்ற பிரச்சாரத்தின் மூலம் மே-15 முதல் ஜூன்-30 வரை தேசிய அளவில் தொடர் பிரச்சாரம் செய்து வருகிறது. இதன் மூலம் கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இடை நிறுத்தம் செய்த மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதும், கல்வி விழிப்புணர்வு பேரணி நடத்துவதும், மற்றும் மாணவர்களுக்கு தேவையான பள்ளி உபகரணங்கள் வழங்குவதும் என தேசம் முழுவதும் பல சமூக நலபணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளி உபகரணங்கள் தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வழங்கி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நெல்லை மேற்கு மாவட்டம், சுரண்டை நகர சமூக மேம்பாட்டு துறை சார்பாக சுரண்டை முஸ்லிம் துவக்க பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுரண்டை நகர தலைவர் தமீம் மற்றும் பக்ருதீன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் ஜமாத் செயலாளர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *