Breaking News

நெல்லை மேற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி!

20140622134909பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “பள்ளி செல்வோம்” என்ற பிரச்சாரத்தின் மூலம் மே-15 முதல் ஜூன்-30 வரை தேசிய அளவில் தொடர் பிரச்சாரம் செய்து வருகிறது. இதன் மூலம் கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இடை நிறுத்தம் செய்த மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதும், கல்வி விழிப்புணர்வு பேரணி நடத்துவதும், மற்றும் மாணவர்களுக்கு தேவையான பள்ளி உபகரணங்கள் வழங்குவதும் என தேசம் முழுவதும் பல சமூக நலபணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளி உபகரணங்கள் தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வழங்கி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நெல்லை மேற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சங்கரன்கோவில் நகரம் சார்பாக கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி நடுநிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் நூர்முஹம்மது அவர்கள் தலைமை வகித்தார். நகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல் மற்றும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *