Breaking News

நாகை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி!

20140622134105

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “பள்ளி செல்வோம்” என்ற பிரச்சாரத்தின் மூலம் மே-15 முதல் ஜூன்-30 வரை தேசிய அளவில் தொடர் பிரச்சாரம் செய்து வருகிறது. இதன் மூலம் கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இடை நிறுத்தம் செய்த மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதும், கல்வி விழிப்புணர்வு பேரணி நடத்துவதும், மற்றும் மாணவர்களுக்கு தேவையான பள்ளி உபகரணங்கள் வழங்குவதும் என தேசம் முழுவதும் பல சமூக நலபணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளி உபகரணங்கள் தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வழங்கி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டிணம் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாகூரில் நான்கு ஏழை மாணவிகளின் பள்ளி படிப்பிற்கு தேவையான செலவீனங்களுக்கு பொறுப்பேற்று, கல்வி உதவித்தொகைகள் மாணவிகளுக்கு மாவட்ட தலைவர் ரபிக் மரைக்காயர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் SDPI கட்சியின் நாகூர் நகர செயலாளர் B.T.நூர்தீன் சாஹிப் அவர்கள் கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *