Breaking News

நபி(ஸல்) அவர்களை அவமதிக்கும் அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து கோவையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

20120920144945இஸ்லாத்தையும், இறைவனின் இறுதித் தூதரான முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் மிகக் கேவலமாக விமர்சிக்கும் ‘innocence of muslims’ திரைப்படத்திற்கு எதிராக உலகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.இறைத்தூதரை அவமதிக்கும் காட்சிகள் ‘innocence of muslims’ என்ற இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இறைத்தூதரின் உருவம் போல் கற்பனையில் அவதூறாக உருவாக்கப்பட்ட கதாப்பாத்திரமும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. யூ ட்யூபில் வெளியான 13 நிமிட டிரைலரிலும் இறைத்தூதரை அவமதிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதைக் கண்டித்து உலகம் முழுவதும் முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.index index111 index111111
அதன் அடிப்படையில் ” இத்திரைப்படத்தில் நடித்த 14 பேரை உலக நீதிபதிக்கு முன் நிறுத்தி தண்டனை கொடுக்க வேண்டும் , அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அனைத்து முஸ்லிம்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் , இந்திய அரசு அமெரிக்க மற்றும் இஸ்ரேலுடனான துதரக உறவை துண்டிக்க வேண்டும் ” ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  15.09.2012  மாலை 7 மணியளவில் மாவட்ட தலைவர் கே ராஜா உசேன் தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் முஹம்மத் அன்சாரி அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *