Breaking News

மதுரையில் அமெரிக்காவை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

20120918220817உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மகாணத்தில் வசிக்கும் யுத இனத்தைச் சேர்ந்த ஷாம் பேசிலி என்ற திரைப்பட இயக்குனரும் அமெரிக்காவைச் சேர்ந்த டெர்ரி ஜோன்ஸ் என்ற கிருஸ்தவ போதகரும் இணைந்து திரைப்படம் ஒன்றை தயாரித்துள்ளனர்.
இதனால் உலகம் முழுவதும் முஸ்லீம் சமூக மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு பல்வேறு நாடுகளில் அமெரிக்காவை கண்டித்து பலவகையான போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. எகிப்து, லிபியா, யெமன்,துனீசியா,பாகிஸ்தான்,லெபனான்,சூடான்,இந்தியா,மெராக்கா, ஃபலஸ்தீன்,பங்களாதேஸ்,ஈரான் மற்றும் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவிற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
இதனுடைய ஒரு பகுதியாகத்தான் 14.09.2012 வெள்ளிகிழமை அமெரிக்காவை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மதுரை நெல்பெட்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ந்டைபெற்றது.இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *