Breaking News

காயல்பட்டணத்தில் அமெரிக்காவை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

20120918210607உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மகாணத்தில் வசிக்கும் யுத இனத்தைச் சேர்ந்த ஷாம் பேசிலி என்ற திரைப்பட இயக்குனரும் அமெரிக்காவைச் சேர்ந்த டெர்ரி ஜோன்ஸ் என்ற கிருஸ்தவ போதகரும் இணைந்து திரைப்படம் ஒன்றை தயாரித்துள்ளனர்.இதனால் உலகம் முழுவதும் முஸ்லீம் சமூக மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு பல்வேறு நாடுகளில் அமெரிக்காவை கண்டித்து பலவகையான போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. எகிப்து, லிபியா, யெமன், துனீசியா, பாகிஸ்தான், லெபனான், சூடான், இந்தியா, மெராக்கா, ஃபலஸ்தீன்,பங்களாதேஸ், ஈரான் மற்றும் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவிற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
இதனுடைய ஒரு பகுதியாகத்தான் 16.09.2012 ஞாயிற்று கிழமை அன்று மாலை 5 மணியளவில் இந்திய அரசுடான அமெரிக்காவின் தூதரக உறவை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அமெரிக்காவை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.இதற்கு தூத்துக்குடி மாவட்ட தலைவர் முஹம்மத் ஹாலித் அவர்கள் தலைமை தாங்கினார்.இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *