Breaking News

ராமநாதபுரத்தில் அமெரிக்காவை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

20120916104140முஸ்லிம்களின் ஒப்பற்ற தலைவரான முகம்மது நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி திரைப்படம் எடுத்த யூத பாதரியார் மற்றும் ஏகாதிபத்திய அமெரிக்க அரசை கண்டித்து பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ராமநாதபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அருகில்,14.09.2012 வெள்ளி கிழமை நடைபெற்றது.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் செய்யது காலித், மாநில பேச்சாளர் அப்துல் ஜமீல், எஸ்.டி.பி.ஐ கட்சியின் ராமநாதபுரம் தொகுதி துணை தலைவர் அப்பாஸ் ஆலிம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில பொறுப்பாளர் சத்தார் அவர்கள் கண்டன கோசங்கள் எழுப்பினார்,. இறுதியாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் ராமநாதபுரம் நகர் தலைவர் பரக்கத்துல்லா அவர்கள் நன்றியுரையாற்றினார்.இந்த கண்டன ஆர்பாட்டத்தில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களுடைய கண்டனத்தை அமெரிக்காவிற்கு எதிராக பதிவு செய்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *