Breaking News

சேலத்தில் அமெரிக்காவை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

20120916102614இஸ்லாத்தையும், இறைவனின் இறுதித் தூதரான முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் மிகக் கேவலமாக விமர்சிக்கும் ‘innocence of muslims’ என்ற திரைப்படத்திற்கு எதிராக உலகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இச்சம்பவம் பெரும் எதிர்ப்பை கிளப்பியிருக்கும் வேளையிலும் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான யூதன் சாம் பாசிலி மீண்டும் இஸ்லாத்தை மோசமாக விமர்சித்து பேட்டியளித்துள்ளான். இஸ்லாம் ஒரு புற்றுநோய் என்று கருத்து தெரிவித்த பாசிலி தனது திரைப்படம் ஒரு அரசியல் சினிமா என்று கூறியுள்ளான்.மேலும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் குறித்த அவதூறான அவமதிக்கத்தக்க தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக கூறுகிறான்.
இதைக் கண்டித்து உலகம் முழுவதும் முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் அடிப்யோர் சிறப்பு விருந்தினர்களாக படையில் “அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அனைத்து முஸ்லிம்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் , இந்திய அரசு அமெரிக்க மற்றும் இஸ்ரேலுடனான துதரக உறவை துண்டிக்க வேண்டும் ” ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இத்திரைப்படத்தை வெளியிட்ட அமெரிக்காவை கண்டித்து சேலத்தில் பழைய பஸ் நிலையம் அருகில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பாக 14 .09 .2012 அன்று மதியம் 3 .00 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்திற்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சேலம் மாவட்ட தலைவர் முஹம்மது பயாஸ் அவர்கள் தலைமை தாங்கினார்.இக்கண்டன ஆர்பாட்டத்தில் SDPI கட்சியின் தமிழ் மாநில பொருளாளர் அம்ஜத் பாஷா, மாவட்ட தலைவர் முஹம்மது ரபி, INTJ மாவட்ட தலைவர் உசைன் , ரஹ்மானியா முஸ்லிம் டிரஸ்ட் மாவட்ட தலைவர் ராஜா முஹம்மது, வளர்பிறை இஸ்லாமிய நலசங்கம் மாவட்ட தலைவர் இனாமுல் ஹசன் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சேலம் மாவட்ட செயலாளர் பைரோஸ் கான் அவர்கள் வரவேற்ப்புரை மற்றும் நன்றியுரை ஆற்றினார். இந்த ஆர்பாட்டத்தில் 120 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *