கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக எழுச்சியுடன் நடைபெற்ற “மக்கள் சங்கமம் மாநாடு”!
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கைநட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட்ஆஃப்இந்தியா சார்பாக “சங்கமிப்போம் சக்திபெறுவோம்” என்ற முழக்கத்தோடு
மக்கள் சங்கமம் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியா முழுவதும் விமர்சையாக கொண்டாட உள்ளது.
இதன் ஒரு பகுதியாக கோவை கோட்டை மேட்டில் ஏப்ரல் 25,26 ஆகிய நாட்களில் மக்கள் சங்கமம் மாநாடு நடைபெற்றது.
மக்கள் சங்கமம் மாநாட்டை முன்னிட்டு விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள், வரலாற்று கண்காட்சி, மாநாடு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாநாட்டின் இரண்டாவது நாளான ஏப்ரல் 26 இன்று மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள், அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் கவுரவிக்கப்பட்டனர்.