Breaking News

தக்கலை டிவிஷன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக எழுச்சியுடன் நடைபெற்ற “மக்கள் சங்கமம் மாநாடு”!

aபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக தேசம் தழுவிய அளவில் மக்கள் சங்கமம் மாநாடு நடைபெற்று கொண்டிருக்கின்றது. அனைத்து சமூக மக்களின் சமூக முன்னேற்றத்திற்காகவும் உரிமை மீட்பிற்காவும் தேசிய அளவில் செயல்பட்டு வரும் நவீன சமூக இயக்கம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

அந்த இலட்சிய இலக்கின் ஒரு பகுதியாக தேசிய அளவில் மக்கள் சங்கமம் எனும் பெயரில் மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குமரிமாவட்டம் தக்கலை டிவிசன் சார்பாக மக்கள் சங்கமம் நிகழ்ச்சி திருவிதாங்கோடு மாலிக் பின் தீனார் திடலில் வைத்து ஏப்ரல் 25,26 ஆகிய நாட்களில் நடைபெற்றது.

மாநாட்டின் முதல் நாளான ஏப்ரல் 25 சனிக்கிழமை, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் மாஹீன் அவர்கள் கொடியேற்ற மாநாடு துவங்கியது. அதனை தொடர்ந்து மர்ஹூம் அபூதாகிர் திடலில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாஅத் செயலாளர் முஹம்மது ஹனீபா துவங்கிவைத்தார். கண்காட்சியில் இந்தியாவில் இஸ்லாம் வந்த வரலாறு, இந்திய முஸ்லிம் ஆட்சியாளர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் திருவிதாங்கோட்டினை பற்றிய வரலாற்று செய்திகள் இடம் பெற்றிருந்தது.

மாநாட்டினை கண்டுகளிக்க வந்த மக்களுக்கு விளையாட்டு போட்டிகள், கலாச்சார நிகழ்சிகள் மற்றும் மேடைப்போட்டிகள் நடத்தப்பட்டது.

மாநாட்டின் இரண்டாவது நாளான ஏப்ரல் 26 மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தக்கலை நகரத்தலைவர் நூருத்தின் பைசல் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல்ரசாக் வரவேற்புரையாற்றினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் மாஹீன், SDPI கட்சியின் மாவட்ட தலைவர் சுல்பிக்கர் அலி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் மாநில பொருளாளர் பைசல் அஹமது மற்றும் ஜாமத் நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் முன்னிலை வகித்தனர்.

மக்கள் சங்கமம் பொதுக்கூட்டதிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் அஹமது நவவி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செய்யதுஅலி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள், அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் கவுரவிக்கப்பட்டனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மக்கள் சங்கமம் மாநாடு தக்கலை பகுதி செயலாளர் ஷரீப் அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.b c d e f g h i j k

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *